ஜப்பான் நாட்டில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனையின் தங்க பதக்கத்தை மேயர் வாயில் வைத்து கடித்ததால் பெரும் சேதமடைந்தது. இதையடுத்து இந்த பதக்கத்தை மாற்றித்தர சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புக்கொண்டுள்ளது.
பாரம்பரியம் (Tradition)
பாரம்பரியமான சில வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் ஆர்வக்கோளாறால் அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கும்போது சில விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியது கட்டாயமாகிவிடுகிறது. அந்த வகையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் (Tokyo Olympics)
ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டி கடந்தவாரம் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் உள்ள பல வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெற்றுப் பதக்கங்களை அள்ளிச் சென்றனர்.
ஜப்பான் அணி வெற்றி (Japan team wins)
இதல் சாஃப்ட் பால் போட்டியில ஜப்பானை சேர்ந்த அணி வெற்றி பெற்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. அதில் மியோ கோட்டோ என்ற வீராங்கனையும் இருந்தார். அவருக்கும் தங்க பதக்கம் வழங்கப்பட்டது.
பாரம்பரியப் பழக்கம் (Traditional habits)
பொதுவாக விளையாட்டு போட்டியில் பதக்கம் வழங்கப்பட்டதும் அந்தப் பதக்கத்தை வாயில் வைத்து கடித்து பார்ப்பது வழக்கம்.
கடிக்கத் தடை (Prohibition of biting)
இது பாரம்பரியமாக வெற்றி பெற்ற வீரர்கள் கடிப்பார்கள். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் இருப்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பாராட்டு விழா (Appreciation Ceremony)
இந்நிலையில் மியோ கோட்டோ பதக்கம் வாங்கியதை பாராட்டும்வகையில் அவரது ஊரான நாகோயாவில் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது.
அந்த பாராட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அந்த ஊரின் மேயரான டாகாஸி காவா முரா என்பவர் ஆர்வகோளாறில் அந்த பதக்கத்தை வாங்கி பார்த்து அதை தன் மாஸ்கை கழட்டின் தன் வாயால் கடித்து விட்டார்.
இதனால் அந்தத் தங்கப் பதக்கத்தை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
புதியப் பதக்கம் (New medal)
மேயரின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. விஷயம் ஊடகங்களில் வலம் வர, சேதமடைந்தப் பதக்கத்திற்கு பதிலாக வேறு ஒரு பதக்கத்தை மாற்றி தர சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவாதம் அளித்துள்ளது.
மேலும் படிக்க...
தங்க பத்திர முதலீடு: ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!
வீட்டுக் கடனுக்கு சலுகை அறிவிப்பு: மூன்று ஜாக்பாட்!
Share your comments