வேளாண்மையில் ஊடுபயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம். எனவே பெரும்பாலான விவசாயிகள் நீண்ட கால பயிர்களுக்கு இடையில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரியகுளம் பகுதிகளில் அதிக நிலபரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழைத்தார் அறுவடைக்கு வர 10 மாதங்கள் ஆகும் என்பதால் விவசாயிகள் உடுபயிராக அதனுள் சின்னவெங்காயம், தட்டை பயறு, மொச்சை, வெண்டை என குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
குறுகியகாலப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலமாக வாழை சாகுபடி செலவை ஈடு கட்ட முடிகிறது என்கிறார்கள். பொதுவாக வாழை நடவு செய்த ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் பூமியில் சூரிய ஒளி விழுவது தடைபடும் என்பதால் அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இதன் முலம் இடுபொருள் இல்லாமலே இலாபம் ஈட்டி வருகிறார்கள்.
Share your comments