இரவு நிகழ்ச்சியில் இளம்பெண்களுக்கு பானம் இலவசம் என்று தனியார் ஹோட்டால் நிர்வாகம், வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளத்தில் கடுமையாக வைரலாகி வருகிறது. இந்த ஹோட்டல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது.
பெண்களும்
ஆண்கள் மட்டும்தான் மதுகுடிப்பார்கள் என்ற நிலை மாறி, இரவு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளம்பெண்களும், ஒயின் குடிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே தற்போது இதுபோன்ற விளம்பரங்களும் வெளியாகி வருகின்றன.
ஒரே இடத்தில்
திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் டுவின் பெல்ஸ் ஹோட்டல் உள்ளது. பார், மசாஜ் சென்டர், உணவகம், தங்கும் அறைகள், விழா அரங்கு உள்ளிட்டவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
டிஜே நைட் பார்ட்டி
இந்த ஹோட்டலின் சார்பில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டனர். டிஜே நைட் பார்ட்டி என்ற பெயரில் நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்ட்டியில் தம்பதி, பெண்களுக்கு நுழைவு அனுமதி இலவசம் என்றும், குறிப்பாக பெண்களுக்கு பானம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பானம் இலவசம்
பெண்களுக்கு பானம் இலவசம் என்பது மதுபானமா என்பதை வெளிப்படையாக தெரிவிக்காமல் அந்த அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறையாக திருப்பூரில் நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் சமூக வலைதளத்தில் கடுமையாக வைரலானது.
நிகழ்ச்சி ரத்து
இதையடுத்து, தனியார் ஹோட்டல் தரப்பினரிடம் போலீஸார் விசாரித்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் அந்த இரவு நிகழ்ச்சியை ரத்து செய்வதாக சம்பந்தப்பட்ட கிளப் தரப்பில் இருந்து தெரிவித்ததாக போலீசார் கூறினர். இந்த ஓட்டல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருப்பூரில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments