1. Blogs

உலகில் 100% காகிதமில்லா முதல் அரசானது துபாய்!

R. Balakrishnan
R. Balakrishnan
100% Paperless Country Dubai

உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது என, அதன் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம் அறிவித்துள்ளார்.

தொழில்நுட்பம் (Technology)

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அதன் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம், நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் துபாய் அரசு துறைகளில் காகித பயன்பாட்டிற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை அவர் தற்போது எடுத்துள்ளார்.

100 சதவீதம் டிஜிட்டல் (100% Digital)

இதுகுறித்து பட்டத்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துபாய் அரசின் கீழ் உள்ள 45 துறைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் (100% Digital) மயமாக்கப்படுகின்றன. இனி இந்த துறைகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படாது. இதனால் ஒரு ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வரை அரசுக்கு சேமிப்பாக இருக்கும். இந்த நடவடிக்கையால் இனி ஊழியர்களின் நேரமும் வீணாகாது.

காகிதமில்லாத அரசு (Paperless Government)

டிஜிட்டல் மயமாக்கும் துபாய் அரசின் பயணத்தில் இது ஒரு புதிய துவக்கம். துபாயில் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் அரசுகளுக்கு இந்த முயற்சி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நடவடிக்கையால் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் காகிதமில்லா அரசாங்கத்தை கட்டமைக்க, திட்டங்களை வகுத்து வந்தாலும் பல்வேறு காரணங்களால் அதை செயல்படுத்த முடியாமல் உள்ளது.

மேலும் படிக்க

8 ரூபாய் முதலீட்டில் 17 லட்சம் வருமானம் தரும் LIC-யின் சூப்பரான பாலிசி!

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: அதிக வட்டி அதிக ஆபத்து!

English Summary: Dubai is the first government in the world to be 100% paperless! Published on: 14 December 2021, 09:37 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.