1. Blogs

உற்பத்தி சரிந்ததை தொடர்ந்து ஒரே மாதத்தில் ரூ.1,400 வரை உயர்வு

Anitha Jegadeesan
Anitha Jegadeesan

பொங்கல் பண்டிகை நெருங்குவதை தொடர்ந்து கரும்பு, மஞ்சள் அனைத்தும் அமோகமாக விற்பனையாகிறது. அந்த வரிசையில், அத்தியாவிசிய பொருட்களில் ஏலக்காய் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஏலக்காய் கேரளா மாநிலம், இடுக்கி மற்றும் தமிழகத்தில் தேனி உட்பட மலை மாவட்டங்களில் விளைகிறது. தற்போது மலை பிரதேசங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் ஏலக்காய் உற்பத்தி குறைந்துள்ளது.

தமிழக அரசும் விலையில்லா பொங்கல் பரிசுப்பொருள் வழங்க, ஏலக்காயை அதிக அளவு கொள்முதல் செய்ததினால் தற்போது சந்தையில் ஏலக்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் அதன் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. முதலில் ரூ.200 உயர்ந்தது, பின் மாத இறுதியில் கிலோவுக்கு, ரூ.800 உயர்ந்தது.  மீண்டும், ஜனவரி மாதம் 7 ஆம் தேதி கிலோவுக்கு, ரூ.400 உயர்ந்தது. ரூ.3,600 இல் விற்கப்பட்ட ஒரு  ஏலக்காய் விலை, தற்போது ரூ.1,400 வரை உயர்ந்து 1 கிலோ, ரூ. 5000 வரை விற்பனையாகிறது.

English Summary: Due to snow fall Cardamom cultivation affected: Price keep on increasing Published on: 10 January 2020, 05:10 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.