பின்லாந்திலுள்ள ஒரு புத்திளம் நிறுவனம், மோட்டார் உலகில் புரட்சியைத் துவங்கி வைத்திருக்கிறது. ஒரு உலோகத் தண்டில் உள்ள வட்டிற்கு, மின்காந்தப் புலத்தால் சுழற்சியை உண்டாக்கி, இயந்திர ஆற்றலை வெளிப்படுத்துகிறது மின் மோட்டார். இந்த சுழற்சியில் ஏற்படும் உராய்வு, கணிசமான ஆற்றல் வீணாகிறது. இதனால், மோட்டாருக்கு தேய்மானம் ஏற்படுகிறது.
ஸ்பின் டிரைவ் மோட்டார் (Spin Drive Motor)
மின் மோட்டார்களுக்கு பராமரிப்புச் செலவு அதிகமாக இருப்பதும் இதனால் தான். இந்த சிக்கலை, மின் காந்த மிதவை சக்தியால் சுழலும் சக்கரம் முற்றிலும் தவிர்த்து விடுகிறது. 'ஸ்பின் டிரைவ்' என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள 'ஆக்டிவ் மேக்னடிக் பியரிங்' (ஏ.எம்.பி.,) தொழில்நுட்பம். இது. மின்காந்தப் புலத்தால், மோட்டாரின் சுழலும் பியரிங் பகுதி மைய அச்சுப் பகுதி உலோகத் தண்டோடு உரசாமல் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உராய்வு இல்லை (Non-friction)
இதனால், ஸ்பின் டிரைவின் காந்த மோட்டார், மற்ற மோட்டார்களை விட குறைவான மின் ஆற்றலை உள்வாங்கி, அதிகமான இயந்திரவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. உராய்வு இல்லை என்பதாலேயே, ஸ்பின் டிரைவிற்கு பராமரிப்புச் செலவு மிகவும் குறையும். தவிர, அதன் ஆயுளும் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும். தவிர, பராமரிப்புக்காக எண்ணெய், மசி போன்றவை தேவையில்லை. இவற்றைத் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
தற்போது பிரபலமாகி வரும் மின் வாகனங்களுக்கும், விரைவில் வரவுள்ள மின்சார விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கும் ஸ்பின் டிரைவ் மோட்டார் கன கச்சிதமாகப் பொருந்தும்.
மேலும் படிக்க
கொசுத் தொல்லைக்கு முடிவு கட்டுகிறது கிராம்பு எண்ணெய்!
முன்கூட்டியே செலுத்தும் மின் கட்டணத்திற்கு 2.70% வட்டி நிர்ணயம்!
Share your comments