பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வழங்கும் வேளாண் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் இணைந்து ' பெரியகுளம் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம்' ஒன்றை நடத்தி வருகிறது. மையத்தின் மூலம் வரும் டிசம்பர் 13 மற்றும் 18 தேதி வெவ்வேறு பயிற்சிகளை தர உள்ளது. வேளாண் சார்ந்த தொழில் முனைவோருக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு வேளாண் சார்ந்த தொழில்களை அறிமுக படுத்துவதுடன் முறையாக பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகள், புதிய தொழில்நுட்பங்கள், சந்தை படுத்துதல் என அனைத்தையும் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் வழங்குகிறது.
தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் இயற்கை விவசாயம், வேளாண் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, தோட்டம் அமைத்தல், நாற்று பண்ணை அமைத்தல், பசுமை குடில் சாகுபடி, மூலிகை மற்றும் மருத்துவ பயிர்கள் வளர்த்தல், காய்கறிகள் மற்றும் பழங்கள் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல், உயிர் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி தயாரித்தல், இணையதள வர்த்தகம், மாடித் தோட்டம் அமைத்தல் போன்ற அனைத்து வேளாண் சார்த்த தொழில்களை துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்றுவிக்கிறார்கள்.
பயிற்சி விவரம்
டிசம்பர் 13 - உயிர் உரம் தயாரித்தல்
டிசம்பர் 18 - ஆடு வளர்ப்பு பயிற்சி
பயிற்சி கட்டணம் - ரூ 600/-
இடம் : தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
பயிற்சியின் வாயிலாக சந்தை வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும். மேலும் விவரங்களுக்கு 93619 21828, 94876 31465 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Share your comments