1. Blogs

மலைத் தோட்டங்களில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
best way to over dryness sprinkler Irrigation

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மலை தோட்டங்களில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து தோட்டங்களில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. இதனால் பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயமே பிரதானமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் மலை காய்கறிகளையும் இணைந்து சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக நெடுகுளா, கூக்கல்தொரை, சுள்ளிகூடு மற்றும் கட்டபெட்டு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக பரப்பளவில் கேரட் சாகுபடி செய்து வருகின்றனர். சந்தையில் ரூ.40 முதல் ரூ.55 வரை விற்பனையாவதால் ஓரளவு லாபம் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதை அடுத்து, விளை நிலங்கள் விரைவில் வறண்டு விடுகிறது. இதனால், விவசாயிகள் கிணறுகள் அமைத்து,  அதிலிருந்து  ஸ்பிரிங்ளர் மூலம், தண்ணீர் பாய்ச்சி தோட்டத்தின் தேவைவை நிறைவேற்றி வருகின்றனர்.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், இனி வரும் நாட்களில், வறட்சியின் தாக்கம் மேலும் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிராதாரங்களான ஓடைகளில் கிணறுகள் அமைத்து, ஸ்பிரிங்ளர் மூலம், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வறட்சியினை சமாளித்து வருகிறோம் என்றனர்.

English Summary: Efficient Water Management of hills Crop: Sprinkler provides best Irrigation Solution for farmers Published on: 28 February 2020, 01:56 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.