பெங்களூரூ ரிசார்ட்டில் தங்கிவிட்டு தொழிலதிபர் ஒருவர் ரூ3.5 லட்சம் பில்லைக் கட்டாமல், தப்பியோடிய சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் அதிபர்
ஆந்திர மாநிலம் புட்டபத்திரியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த ஜூலை மாதம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியுள்ளார். சரியாக ஜூலை 23ம் தேதி முதல் அந்த ரிசார்ட்டிலேயே தங்கி வந்துள்ளார்.
இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு நாள் வாடகை ரூ.7,850 எனக் கூறப்பட்டுள்ளது. அதற்கு சம்மதம் தெரிவித்து அவர் அந்த ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.
8 லட்சம் வாடகை (8 lakh rent)
கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை, இவர் தான் தாங்கியதற்கு சரியாக பில் செலுத்தியுள்ளார். ரூ 8 லட்சம் வரை பில் கட்டியுள்ளார். இதனால் ரிசார்ட் நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்ததுடன், இவர் தொடர்ந்து ஓட்டலிலேயே தங்கவும் அனுமதி அளித்துள்ளது. இவர் தன்னை ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்றும், தனக்கு பெங்களூரு மற்றும் ஆந்திராவில் சொந்தமான பல இடங்கள் உள்ளது. அதை பிளாட் போட்டு விற்கவே பெங்களூருவில் தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளார்.
தப்பியோட்டம் (Escape)
இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி ரிசார்ட்டிலிருந்து வெளியே சென்ற தொழில் அதிபர் திரும்ப வரவேயில்லை. அவர் கொடுத்த செல்போன் எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம் அவரது ரூமை திறந்து பார்த்த போது அதில் அவர் பொருட்கள் எதுவுமே இல்லை என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் தான் ரிசார்ட் நிர்வாகம் ஏமாற்றமடைந்ததை அறிந்து தற்பாது அவர் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிட்டனர் அதில் ரூ3 லட்சம் பாக்கி இருந்தது. இதையடுத்து ரிசார்ட் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் முறை அல்ல (Not the first time)
ரூம் எடுத்துத் தங்கிவிட்டு, பில் கட்டாமல் கல்தாக் கொடுத்துவிட்டுத் தப்பிய சம்பவங்கள் மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் நிர்வாகங்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பமுடியும்.
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Share your comments