நாட்டுக் கோழி வளர்பவருக்கும், வளர்க்கும் ஆர்வமுள்ள அனைவருக்கும் தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் பயிற்சி முகாம் ஒன்றை வருகிற 10ம் தேதி நடத்த உள்ளது. இதில் நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் பங்கு பெற விரும்பும் அனைவரும் மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது லாபம் தரும் தொழிலாகும். இன்றைய சூழலில் விவசாயிகள் மட்டுமல்லாது அனைவரும் உபதொழில் ஒன்று அவசியமாகிறது. இத்தொழிலை விவசாயிகள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள், குடும்ப தலைவிகள்உள்ளிட்ட அனைவரும் இதில் ஈடுபட்டு கூடுதல் வருமானம் பெறலாம்.
குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். நாட்டுக் கோழி வளர்ப்புக்கு குறைந்த இட வசதி மற்றும் குறைந்த தண்ணீர் வசதி போதுமானது. வீடுகளிலே சிறிய அளவில் குடில் போன்று அமைத்து கோழிகளை வளர்க்கலாம். நாட்டுக் கோழிகளுக்கான சந்தை மிகப் பெரியது. இதற்கான தேவையும் அதிகமிருப்பதால் தாராளமாக இத்தொழிலை தொடங்கலாம். பிராய்லர் கோழிகள் போல் இல்லாமல் நோய் தொற்றுகளை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது.
பயிற்சி முகாம் விபரம்
பயிற்சியானது தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வரும் டிசம்பர் 10ம் தேதி ( செவ்வாய் கிழமை) காலை 10 மணி முதல் நடை பெறவுள்ளது.
பயிற்சியில் பங்கேற்கும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை கைவசம் வைத்துக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 87547 48488, 04362-264665 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Share your comments