வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்கள் வங்கிக்கணக்கின் KYC-ஆவணத்தை இம்மாத இறுதிக்குள் புதுப்பிக்காவிட்டால், கணக்கு முடக்கப்படும் என SBI எச்சரிக்கை விடுத்துள்ளது.
SBI புதிய அறிவிப்பு (SBI New Announcement)
நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி சேவைகள் நிறுத்தப்படும் (Banking services will be suspended)
இதில், வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கணக்கின் KYC-ஐ தாமதமின்றி புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். KYC ஐ புதுப்பிக்காதவர்களின் வங்கி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
காலக்கெடு (Last date)
இந்தத் தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் SBI பகிர்ந்து கொண்டுள்ளது.
அதில், 'வாடிக்கையாளர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வங்கி சேவைகளைத் தொடர 31 மே 2021 க்குள் KYC ஐ புதுப்பிக்க வேண்டும்.
கணக்குகள் முடக்கப்படும் (Accounts will be disabled)
இதற்காக, வாடிக்கையாளர்கள் தங்கள் KYC ஆவணத்தை எடுத்துக்கொண்டு, அவர்களது கிளை (Home Branch) அல்லது அவர்கள் அருகிலுள்ள கிளைக்கு செல்லலாம். கொரோனா காரணமாக, இந்த வசதியை மே 31 வரை நீட்டித்துள்ளோம். இதற்குப் பிறகு, KYC புதுப்பிக்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகள் முடக்கப்படும்
இவ்வாறு SBI தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே (From home)
இந்த கொரோனா தொற்றுநோயால் (Coronavirus) வங்கிக்குச் செல்லத் தயக்கம் காட்டுபவர்களுக்காக, SBI தபால் அல்லது மின்னஞ்சல் வசதயையும் அளித்திருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் KYC தொடர்பான ஆவணங்களை வங்கிக்குச் செல்லாமல் இவற்றின் மூலம் அனுப்பலாம். இப்படி செய்யும்போது, KYC புதுப்பிக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டு அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க...
SBI-யின் அதிரடி ஆஃபர்! பிரிமியமே இல்லாமல் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்!
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்: 6 ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி கடன்!
வங்கிகள் இனி 4 மணிநேரம் மட்டுமே செயல்படும்- முழு விவரம் உள்ளே!
Share your comments