கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், எல்ஐசி வாடிக்கையாளர்கள் தவறவிட்ட பாலிசிகளை (Policy) புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 'Special revival campaign' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், இதுவரை பாலிசிகளை தவறவிட்ட வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். மார்ச் 6ஆம் தேதி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.
கால அவகாசம்
தவறவிட்ட பாலிசிகள் (lapsed policy) என்றால், உரிய காலத்தில் பிரீமியத் தொகை செலுத்தாமல் விட்ட பாலிசிகள் ஆகும். எல்ஐசி வழங்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாலிசியை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில், தவறவிட்ட பாலிசியை புதுப்பிக்காவிட்டால் இழப்பே மிஞ்சும். நாடு முழுவதிலும் இருக்கும் 1,500 எல்ஐசி அலுவலகங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம். பிரீமியம் (Premium) செலுத்தாத தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே பாலிசியை புதுப்பித்துக்கொள்ள முடியும் என எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆயுள் காப்பீட்டுக்கு முக்கியத்துவம்:
பிரிமீயம் செலுத்தாமல் தவறவிட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த பாலிசிகளை இப்போது புதுப்பிக்க முடியாது. முடிந்தவரை, வாய்ப்பு கையில் இருக்கும்போதே பாலிசியை புதுப்பித்துவிட வேண்டும். இதேபோல கடந்த அக்டோபர் மாதமும் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி வாய்ப்பளித்தது. வாடிக்கையாளர்களின் ஆயுள் காப்பீட்டுக்கு (Life insurance) அதிக முக்கியத்துவம் அளிப்பதால், தவறவிட்ட பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி எல்ஐசி கேட்டுக்கொண்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வரவிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான எதிர்ப்பார்ப்பு!
Share your comments