நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை, புரட்டி எடுத்துவரும் நிலையில், தனது மகளின் திருமணத்திற்காக கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்துவைத்திருந்த 2 லட்சம் ரூபாயை, கொரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக அளித்திருக்கிறார் ஒரு விவசாயி.
ஆக்ஸிஜன் வார்ப்பு (Oxygen casting)
இதன் மூலம் இந்தியக் குடிமக்கள் பலரது வயிற்றில் அவர் ஆக்ஸிஜனை வார்த்திருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது.
வேதனைப்பட்ட விவசாயி (The tormented farmer)
மத்தியப் பிரதேசம் மாநிலம் நீமச் மாவட்டதைச் சேர்ந்த விவசாயி சம்பாலால். இந்த மாவட்டத்தில், கொரோனா தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியாமல், மாவட்ட நிர்வாகம் தவித்து வருகிறது.
நிதியுதவி அளிக்க (To finance)
நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து உயிரிழப்பதை அறிந்து சம்பாலால் மிகவும் வேதனைப்பட்டார். விலைமதிப்பில்லாத உயிர்களை கொரோனாவிற்கு பலியாவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்தார்.
என்ன செய்தார் தெரியுமா? (Do you know what he did?)
தனது மகளின் திருமணத்திற்காக பல ஆண்டுகளாகச் சேமித்துவைத்த 2 லட்சத்தை எடுத்து, உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்காக வழங்கியுள்ளார். இந்தத் தொகையின் மூலம் 2 சிலிண்டர்கள் வாங்க முடியும் என்பதால்,அதில் ஒரு சிலிண்டர், தாம் வசிக்கும் ஜீரன் தெஹ்சில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
எளிமையாகத் திருமணம் (Simply married)
பின்னர் திட்டமிட்டபடி தனது மகளின் திருமணத்தையும் நடத்தி முடித்தார். ஆனால் மிகவும் எளிமையாக. தந்தையின் இந்த முடிவுக்கு மகளும் ஆதரவு அளித்துள்ளார். இந்த விவசாயிகள் நடவடிக்கை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க...
இரண்டரை ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ரூ.1.13 லட்சம் மானியம்!
மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!
மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!
Share your comments