வேளாண் மீதான தடை உத்தரவை நீக்கியதை அடுத்து, அதற்கு தேவையான இடுபொருள், உரம் போன்றவை தடையின்றி பெற அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் பொருட்களை அரசு, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை கூடங்களில் தடையின்றி பெற்றுக்கொள்ளலாம், என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தற்போது விவசாயிகள் அரசின் அனுமதியுடன் வேளாண் பணிகளை துவங்கி உள்ளனர். விதைப்பு, நடவு, அறுவடை போன்ற பணிகள் நடந்து வருகிறது. விதைப்பு மற்றும் நடவு சார் பணிகளுக்கு தேவையான இடுபொருள், உரம், விதை, பூச்சி மருந்து போன்ற தடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்து அரசு, தனியார், கூட்டுறவு நிலையங்கள் தினமும் காலை, 8.00 மணி முதல் 11.00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
விவசாயிகள் கவனத்திற்கு
- விவசாயிகள் சமுதாய இடைவெளி கடைபிடிக்கவும், பொருள் பெற்று செல்லும் முன் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து பின் பெற்று செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.
- விவசாயிகள் தங்களது விளை பொருட்கள் சந்தைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ எடுத்து செல்ல, விரும்பினால் முறையான அனுமதி பெற வேண்டும். முன்னதாக அப்பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொலைபேசிலோ, மின்னஞ்சலின் மூலமோ தொடர்பு கொண்டு, விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் தாசில்தார் மூலம் ஒப்புதல் பெற்றுத்தரப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Share your comments