1. Blogs

ஒலிம்பிக்கில் சாதித்த விவசாயி மகன்: நீரஜ் சோப்ரா!

R. Balakrishnan
R. Balakrishnan
Neeraj Chopra
Farmer's son achieves in Olympics

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது. ஈட்டி எரிதல் போட்டியில் இந்தியாவில் சார்பில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) அந்த போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை பெற்றார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அவர். இந்தியாவிற்கான மிகப்பெரிய பெருமையை தேடி தந்துள்ளார். இந்த பதவில் அவரை பற்றி முழு தகவல்களை தான் காணப்போகிறோம்.

சுபேந்தர் நீரஜ் சோப்ரா

சுபேந்தர் நீரஜ் சோப்ரா 1997ம் ஆண்டு பிறந்தவர். ஹரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்த சதீஷ் - சரோஜ் தேவி ஆகியோரின் மகனான இவர் இன்று நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ளார். இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். 24 வயதான இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதன் முறையாக பங்கேற்றார். இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து தங்க பதக்கத்தை (Gold Medal) தட்டி சென்றுள்ளார்.

இளம் வயது சாதனை

இவர் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஏசியன் கேம்ஸ் போட்டியில், 88.06 மீட்டர் ஈட்டி எரிந்து தனது அதிகபட்ச சாதனையாக வைத்திருந்தார். இவர் 2016ம் ஆண்டே 20 வயதிற்குட்படவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் 86.48 மீட்டர் தூரம் ஈட்டி வீசி முதலிடம் பிடித்தவர். 20 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்தியாவிலிருந்து முதலிடம் பெறும் முதல் தடகள வீரராக நீரஜ் இருந்தார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எரிதல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு டோக்கியோவிற்கு சென்றார். அங்கு 86.65 மீட்டர் ஈட்டி எரிந்து தகுதி சுற்றில் தேர்வாகி மெயின் சுற்றிற்கு சென்றார். இறுதி போட்டியில் இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் முதல் வாய்ப்பில் 87.03 மீட்டரும், இரண்டாவது வாய்ப்பில் 87.6 மீட்டரும் ஈட்டி எரிந்தார். அதில் 87.6 மீட்டர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மற்ற வீரர்கள் அவரை விட குறைவான தூரத்தில் ஈட்டியை எரிந்திருந்ததால் இவருக்கு தங்க பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நபர்

இந்தியாவிலிருந்து இதுவரை ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் விளையாட்டில் தங்கம் வென்ற ஒரே வீரர் அபிநவ் பிந்த்ரா தான். இவர் 2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றார். அதன் பின் சுபேந்தர் நீரஜ் சோப்ரா ஈட்டி எரிதலில் தங்கம் வென்றுள்ளார்.

உலக ஜூனியர் சாம்பியன்

நீரஜ் இதற்கு முன்னர் தெற்காசிய கேம்ஸ் போட்டியில் 82.23 மீட்டர் ஈட்டி எரிந்து இந்தியாவின் தேசிய சாதனையை சமன் செய்தார். பின்னர் 2016 ல் 20 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன் சிப் (World Championship) போட்டி போலந்தில் நடந்தது. அதில் அவர் உலக ஜூனியர் ஈட்டி எரிதலில் சாதனை படைத்துள்ளார்.

தடகளத்தில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார் நீரஜ் சோப்ரா!

உலக சாதனை

பின்னர் 2017 ஏசியல் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 85.23 மீட்டர் ஈட்டி எரிந்தார். 2018 காமன் வெல்த் (Commonwealth) போட்டியில் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தனது திறமையை நிரூபித்தார். 2018ம் ஆண்டு இவர் தோஹா டைமண்ட் லீக் போட்டியில் 87.43 மீட்டர் ஈட்டி எரிந்து அவரது சாதனையை அவரே முறியடித்தார்.

அர்ஜூனா விருது

2018ம் ஆண்டே அவர் கோல்ட் கோஸ் காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றதற்காக அரசு அவருக்கு அர்ஜூனா விருதை (Arjuna Award) வழங்கியது. தொடர்ந்து அவர் பயிற்சியில் இருந்ததால் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பயிற்சியாளர்

இவருக்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பயோ மெக்கானிக்ஸ் எக்ஸ்பர்ட் கலூஸ் பார்டோனியட்ஸ் என்பவர் தற்போதுபயிற்சி அளித்து வருகிறார். முன்னதாக கேரி கால்வெர்ட், வார்னர் டேனியல், உவே ஹோகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

ராணுவப்பணி

இவர் பள்ளி காலத்திலேயே விளையாட்டில் சிறந்து விளங்கியதால் இவருக்கு தகுந்த நேரத்தில் இந்திய அரசு இவரை இந்திய ராணுவத்தில் சேர்த்து தொடர்ந்து விளையாட ஊக்கமளித்தது. தற்போதும் இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் இந்திய ராணுவத்தில் சப்பேடர் எனும் பதவியில் இருக்கிறார்.

ராணுவ விருது

இவர் ராணுவத்திலும் சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு விஷிஷ்ட் சேவா எனதும் விருதை இந்திய ராணுவம் (Indian Army) வழங்கியுள்ளது. இவர் சர்வதேச அளவில் விளையாட்டில் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் முதலிடம் தான் பிடித்துள்ளார்.

தாய் தந்தை

ஹரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்த சதீஷ் - சரோஜ் தேவி ஆகியோரின் மகனான இவர் இன்று நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ளார். இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். இவரது விளையாட்டை பார்த்து பல சர்வதேச வீரர்களே அசந்து போயுள்ளனர்.

மேலும் படிக்க

மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ரவிக்குமார் சாதனை!

English Summary: Farmer's son achieves in Olympics: Neeraj Chopra! Published on: 08 August 2021, 11:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.