அமெரிக்காவில், மாஸ் அணிய பயணி அடம்பிடித்தால், விரக்தியடைந்த விமானி, விமானத்தைப் புறப்பட்ட இடத்திற்கே திருப்பியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மியாமியில் தரையிறங்கியதும், முகக் கவசம் அணிய மறுத்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நம்மைத் தற்காத்தக்கொள்ள மாஸ்க் எனப்படும் முகக்கவசம் மிக மிக அவசியம் என அரசு சார்பில், அறிவுறுத்தப்பட்டு, மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், சில முரண்டு பிடிக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு சம்பவம்தான் இது.
அடம் பிடித்தப் பயணி
அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணித்த ஒரு பயணி, முக கவசம் அணிய மறுத்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என விமான பணியாளர்கள் எடுத்துக் கூறியும் அந்தப் பயணி கேட்கவில்லை. பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்குத் திருப்பினார்.
தரையிறங்சிய விமானம்
மியாமி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விமானத்தைத் தரையிறக்க அனுமதி பெற்றார். விமானம் தரையிறங்கியதும், முகக் கவசம் அணிய மறுத்த பயணியைப் போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரது பயண அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பயணியை, விமான பயணத்திற்கு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்திருப்பதாகவும் விமான நிறுவனம் கூறி உள்ளது.
மாஸ் காட்டுபவர்கள்
அரசின் கட்டுப்பாடுகள் நம் நன்மைக்கே என்றுத் தெரிந்தபோதிலும், இப்படி வெட்டி பந்தாவுக்காகவும் வீம்புக்காகவும் மாஸ் காட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சிரமம் மற்றவர்களுக்கும் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தால்தான் நிலைமை மாறும்.
மேலும் படிக்க...
Share your comments