கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதாகக் கருதப்படும் பாரத ஸ்டேட் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் செலவு இனி வரும் காலங்களில் அதிகரிப்பது உறுதியாகியுள்ளது.
எஸ்பிஐ
எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit card) வைத்திருப்போருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இனி EMI பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
எவ்வளவு உயர்வு?
EMI பரிவர்த்தனைகளுக்கு இதுவரை பிராசஸிங் கட்டணமாக (Processing fee) 99 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதாவது, நீங்கள் ஆன்லைன் நிறுவனங்களிடமோ, நேரடியாக ஸ்டோர்களிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிட்டு அதற்கான கட்டணத்தை கிரெடிட் கார்டில் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
பிராசஸிங் கட்டணம்
இப்போது கட்டணத்தை EMIஆக மாற்றும்போது அதற்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவரை EMI பிராசஸிங் கட்டணமாக 99 ரூபாயை வசூலித்து வந்தது எஸ்பிஐ. இனி EMI பிராசஸிங் கட்டணமாக 199 ரூபாய்+வரி வசூலிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதைத்தவிர, கிரெடிட் கார்டு வாயிலாக வாடகை செலுத்தினால் பிராசஸிங் கட்டணமாக 99 ரூபாய்+வரி வசூலிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ
இதேபோல கடந்த செப்டம்பர் மாதம் ஐசிஐசிஐ வங்கியும் (ICICI Bank) கிரெடிட் கார்டு வாயிலாக வாடகை செலுத்துவதற்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்தக் கட்டணம் அக்டோபர் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments