1. Blogs

கல்லறைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த விரல்கள்! விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Fingers sticking out of the grave! Details inside!

காட்டில் தனியாக நடந்துசெல்வது என்பதே அச்சத்தை அதிகரிக்கும். அவ்வாறு நடந்துசெல்லும்போது,உங்கள் கண்களுக்குக் கல்லறைத் தென்பட்டால். சொல்லவே வேண்டாம் பீதியின் பிடியில் இருக்க நேரிடும்.

திகில் அனுபவம் (Horror experience)

அந்த சமயத்தில், கல்லறைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது அந்த விரல் போன்ற ஒன்று. இங்கிலாந்தில் ஒருவருக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு நபர் காட்டுப்பகுதி வழியாகச் சென்றபோது, ​​கல்லறையின் மேல் இருந்து இறந்த உடலின் விரல்கள் வெளியே வருவதை ஒருவர் கண்டாதாகவும், பயத்தில் அலறியதாகவும், அந்நாட்டு நாளிதழில் செய்தி வெளியானது.

பவளச் செடி (Coral plant)

பயத்தில் உறைந்து போன அந்த நபரால், தனது கால்களை நகர்த்த கூட முடியவில்லை. ஆனால் சுதாரித்துக்கொண்டு கவனித்தபோது உண்மை புரிந்தது.அது, இறந்த மனிதனின் விரல்கள் அல்ல, மனித விரல் போன்றுத் தோற்றமளிக்கும் பவளச் செடி.

இந்தப் பவளச்செடிகள் வளர்ந்த பிறகு, அதன் கிளைகள் தரையில் இருந்து கிழித்து வெளியே வரும் போது , அச்சுஅசலாக மனித விரல்களைப் போன்று இருக்கும். இந்த காரணத்திற்காக, இந்த பவளச் செடிகள் இறந்த மனிதனின் விரல்கள் (Dead Man's Fingers) என்று அழைக்கப்படுகிறது.

ஹாலோவீன் திருவிழா

மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் வெளிநாடுகளில் ஹாலோவீன் (Halloween) தினம்  அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பயமுறுத்தும் வகையில் தோற்றமளிக்கும் வகையில் அலங்காரம் செய்து கொள்கின்றனர்.

 இந்த  நிகழ்ச்சியில், பவளச் செடிகளும் கல்லறைகளும், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும் படிக்க...

English Summary: Fingers sticking out of the grave! Details inside! Published on: 03 November 2021, 09:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.