கோவையைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் 41 பேர் , தங்கள் சொந்த செலவில், விமானத்தில் பறந்தனர். இதன் மூலம் இவர்களது கனவு நனவான நிலையில், தங்கள் ஆசை நிறைவேற ஆதரவு அளித்த ஆதியோகிக்கும், ஈஷாவிற்கும் அவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
விமானப் பயணம் என்பது பெரும்பாலானோருக்கு, கனவாக இருக்கிறது. ஏனெனில், இந்தப் பயணத்திற்கு நாம் அதிகளவில் பணம் செலவிட வேண்டும். சில நிமிடப் பயணத்திற்கு பெருந்தொகையைச் செலவிடவேண்டி இருப்பதால், பலருக்கு எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. ஆனால், பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களின் விமானக் கனவை நிறைவேற்றி இருக்கிறது ஈஷா.
41 பேர்
கோவை மாவட்டத்தின், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையிலிருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர்.
ஆகாயப் பயணம்
இவர்கள் இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 12 :45க்கு சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை விமானப் பயணிகள் ஆவர்.ஆதியோகி சிலையைக் காண வருவோரின் மூலம் அங்கு கடை நடத்திவரும் இவர்களின் வாழ்க்கையும் பிரகாசமாகியுள்ளது. இதனால், தங்கள் சொந்தச் செலவில் இந்த ஆதிவாசி மக்கள் தற்போது விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆதியோகியால் மாற்றம்
இதுவரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது என்றார் வெள்ளாச்சியம்மா.மடக்காடு கிராமத்தை சேர்ந்த இவர், ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் இளநீர் விற்பனை செய்கிறார். 2017ல் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டே இந்த விமான பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
சிறப்பான வரவேற்பு
முதல் முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். இந்தப் பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க...
பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த எருமை மாடு!
பெண்களுக்கு சூப்பர் வசதி- ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments