1. Blogs

பறக்கும் சொகுசுப் படகு- விண்ணைத் தொடும் அனுபவம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பயன்படுத்தி மகிழ உள்ளனர். அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்கிற நிலை உருவாக்கப்பட உள்ளது.

இதற்கு ‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் படகில் 8 முதல் 12 பேர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகின் வெள்ளோட்டம் விரைவில் துபாய் கடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த படகில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த படகு இயங்கும்போது சத்தம் வராது என்றும், தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் இந்த படகு பறந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையில்லாப் படகு

மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த படகு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் புகை போன்ற உமிழ்வுகளை வெளியேறுவதில்லை. எனவே இந்த படகு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது எனக் கூறப்படுகிறது.

இந்த படகு பயன்பாட்டுக்கு வந்தவுடன் மக்கள் பயணிக்க ஆர்வமாக உள்ளனர். இதற்காகத் தற்போது பலர் முன்பதிவு செய்து கொண்டுள்ளனர்.
அவ்வாறு சத்தமில்லாத இந்தப் பறக்கும் படகில் சுற்றுலாப் பயணிகள் பயணித்தால், அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க...

குளிருக்காகப் பற்ற வைத்தஅடுப்பு- பறிபோன 5 உயிர்கள்!

கண்ணத்தில் அறைந்த மணமகன்- கல்யாணத்தை நிறுத்திய மணமகள்

English Summary: Flying Luxury Boat - Sky Touching Experience! Published on: 03 February 2022, 10:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.