1. Blogs

பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை - புதிய முயற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Free Auto for Women - New Try!

நாம் ஒரு பணியைச் செய்யும்போது, அதனை அர்ப்பணிப்போடு செய்தால் அடுத்த இலக்கை அடையலாம். அந்த அர்ப்பணிப்புடன், சமூக அக்கறையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம். இதைத் தான் செய்திருக்கிறார் ராஜி அசோக் என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர்.

தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசிக்கின்றனர். அதில், அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக சுமார் 10 லட்சம் பேர் ஷேர் ஆட்டோர் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாவை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லட்சம் ஆட்டோ இயங்கி வருகிறது.இவை தவிர அரசு பேருந்து, புறநகர் மின்சார ரயில் உள்ளிட்டவைகள் மூலம் நடுத்தர மக்கள் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தனியார் நிறுவங்களில் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. அதன் பிறகு சுமார் 3 மடங்கு இருசக்கர வாகனம் சென்னையில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாகச்சென்னை நகர வாசிகள் தங்களது தேவைக்காக பல்வேறு விதங்களில் பயணம் செய்து வரும் நிலையில், ஆட்டோக்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையில், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதிகளில் ஆட்டோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பி.ஏ பட்டதாரியான பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக், மகளிர் மற்றும் முதியோருக்கு இரவு 10 மணிக்கு மேல் இலவசமாக சேவை அளித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மருத்துவமனை செல்வதற்கான அவசர தேவைக்கு 24 மணிநேரமும் இலவச சேவை வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமூக சேவகி ராஜி அசோக்.

கேரளாவில் இருந்து தனது கணவருடன் சென்னைக்கு குடிபெயர்ந்த ராஜி, 23 ஆண்டுகளாக சென்னையில் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், அதன் மூலம் நிறைவான வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
பக்கத்தில் செல்வதற்கே, பல மடங்கு கட்டணம் பெற்று கொள்ளையடிக்கும் சில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மத்தியில் ராஜியின் சேவை மரியாதைக்குரியது தானே!

மேலும் படிக்க...

விஷம் வைத்து மயில்கள் கொலை - விவசாயி கைது!

பிறந்து 7 நாட்களே ஆனப் பெண் குழந்தை- சுட்டுக்கொன்றத் தந்தை!

English Summary: Free Auto for Women - New Try! Published on: 13 March 2022, 04:43 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.