கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், வட்டார வேளாண்துறை இணைந்து வழங்கும் இலவச கண்டுணர்வு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். இவற்றை கரூர் கால்நடை பயிற்சி மையமும், வட்டார வேளாண்துறையும் இணைந்து அட்மா திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளை அழைத்து செல்ல உள்ளது. எனவே கரூர் மாவட்டதை சேர்ந்த, 60 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவிற்காக கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து செல்கின்றனர். பெங்களுரில் உள்ள தேசிய பால் வள ஆராய்ச்சி நிலையம், ஆடுகொடியில் அமைந்துள்ள தேசிய கால்நடை ஊட்டசத்தியில் ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஹெப்பால் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுவர்.
கண்டுணர்வு சுற்றுலாவின் சிறப்பம்சங்கள்
இதில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பின்வரும் தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான பயிற்சி அளிக்கப் பட உள்ளது.
- சுத்தமான மற்றும் தரமான பால் உற்பத்தி முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள்
- பாலில் உள்ள முக்கிய மூலக்கூறுகளான கொழுப்புச் சத்து மற்றும் இதர திட பொருள்களின் அளவை அதிகரித்தல்
- கலப்படம் மற்றும் பாலின் தரத்தை அறிவது
- மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான பால்கோவா, நறுமண பால் மற்றும் மோர், பன்னிர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் தயாரித்தல்
கல்வி சுற்றுலா செல்லும் விவசாயிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தரப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் நேரிலோ அல்லது கடிதம் மூலமோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி 04324 294335,
அலைபேசி 73390 57073
மின்னஞ்சல் karurvutrc@tanuvas.org.in
கல்வி சுற்றுலா - 17/02/20 - 21/02/20
விண்ணப்பிக்க கடைசி நாள் - 22/01/20
Share your comments