வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர் (Family member)
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அவற்றின் மீது அலாதி அன்மையும், பாசத்தையும் கொட்டுவது வழக்கம். அதுமட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்துக்கொள்ளும் அளவுக்குக் குடும்ப உறுப்பினராகவே நடத்துவர்.
செல்லப்பிராணிகள் (Pets)
நாய், பூனை, முயல் உள்ளிட்ட பல வகையான செல்லப்பிராணிகளை பாசமாக வளர்த்து வருகின்றனர். அதற்கு சரியான நேரங்களுக்கு அவற்றிற்கென தனி உணவு கொடுப்பது, மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லுவது என பராமரிப்புகளையும் பார்த்து பார்த்து செய்வது வழக்கம். ஏன் அவற்றுக்கு மருத்துவக் காப்பீடு செய்து கொள்வதுகூட வெளிநாடுகளில் உண்டு.
2 நாள் வரை விடுமுறை (Holiday up to 2 days)
இந்நிலையில், செல்லப்பிராணி பிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில், ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது கொலம்பிய அரசு. அது என்ன தெரியுமா? உங்கள் மனதிற்கு நெருங்கியச் செல்லபிராணி இறந்துவிட்டால்,
அதன் இறுதி சடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் வரை விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதா (Bill in Parliament)
இது தொடர்பான அறிவிப்பில், ஒரு வீட்டின் செல்லப்பிராணி இறந்தால், அதன் ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெற அனுமதிக்க வேண்டும் என்றதொரு புதிய சட்ட மசோதாவை, கொலம்பிய லிபரல் கட்சியை சேர்ந்த அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாகான் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் செல்லப்பிராணிகள் ஒரு முக்கிய பாகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு உத்தரவு (Government order)
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்ட கொலம்பியா அரசு, ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் விலங்குகளின் நலனை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை இல்லாத சிலர், செல்லப்பிராணிகளை குழந்தைகளாக நினைத்து பாவித்து வருவதால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments