யாத்திரை மேற்கொண்டு கடவுளின் தரிசனத்துடன் நாளைத் தொடங்க, இதயம் விரும்புவது உண்டு. ஆனால் உண்மை நிலவரம், வேலை, வியாபாரம், வீடு, குடும்பம் போன்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு கோவில் யாத்திரைக்குச் செல்வது என்பது சாத்தியமில்லை. தற்போது இதற்கான வழியும் கிடைத்து விட்டது, இப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் நமக்குப் பிடித்தமான கடவுளின் பிரசித்தி பெற்ற இடத்தின் தரிசனம் நீங்கள் இருக்கும் இடத்தில் தர்சிக்கலாம்.
நம் வீட்டின் பெரியவர்களுக்கு கோவிலுக்கு செல்வது எவ்வளவு பிடிக்கும் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிந்தாலும், நம்மால் நிறைவேற்ற முடியாமல் போவதற்கு காரணம் பல இருந்தாலும் முக்கிய காரணம் அவர்களது உடல்நிலை ஆகும். எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிட்டது. ஆம் Temple 360 மூலம், இனி வீட்டில் இருந்தபடி, நாளின் தொடக்கத்தை உங்களுக்கு விருப்பமான கடவுளின் பிரசித்தி இடத்தில் இருந்து காணொளி வாயிலாக காணலாம், அரசின் அசத்தல் ஏற்பாடு.
Temple 360 என்பது இந்திய அரசின் ஒரு முயற்சியாகும், இதில் ஜோதிர்லிங்கங்கள் மற்றும் தாம்கள் உட்பட நாட்டின் பல புனித யாத்திரைகளை நாம் கணினி அல்லது மொபைலில் வீட்டில் இருந்தபடி தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் பார்வையிட விரும்பும் கோயிலைத் தேர்ந்தெடுத்து உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனத்தில் நேரடியாகத் காணலாம்.
கடவுளின் நேரடி தரிசனம். தினமும் உங்கள் இஷ்டா தேவத்தின் ஆரத்தியில் நீங்களும் ஒருவராக கலந்து கொள்ளலாம், கோவில் 360, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ஆத்மார்த்தமான பரிசு ஆகும்.
மேலும் படிக்க: இப்போது உங்கள் WhatsApp கணக்கில் 4 சாதனங்களை இணைக்கலாம்!
Temple 360 என்பது என்ன?
Temple 360 என்பது இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் கலாச்சார அமைச்சகத்தின் பிரசாகும். புத்தாண்டின் தொடக்கத்தில் நமது புதிய முயற்சிகள் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் அனைத்திற்கும் நல்ல தொடக்கத்தைக் வழங்க, இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த இணையதளத்தின் மூலம், இந்தியாவின் கோவில்கள் முழுவதிலும் உள்ள நேரடி கேமராக்கள் மூலம் ஆன்மீக பயணங்கள் மற்றும் கோவில் தரிசனங்களின் அனுபவத்தை 24*7 உங்களுக்குக் கொண்டு சேர்ப்பதே, இதன் நோக்கமாகும். எதிர்காலத்தில், இணையதளம் போன்ற பல்வேறு சேவைகளைப் பெறவும் உதவும்
E-Prasad
E-Arti
E-Sringaar
E-Donation
இந்த அனுபவத்தை பெற நீங்கள் இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://temple360.in/
மேலும் படிக்க:
இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு !
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி செய்வதாக அரசு உறுதி
Share your comments