1. Blogs

பிறந்து 7 நாட்களே ஆனப் பெண் குழந்தை- சுட்டுக்கொன்றத் தந்தை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Girl baby - father shot dead!

கருவில் சுமப்பது ஆணா? அல்லது பெண்ணா? என்பது நம் கையில் இல்லை. கடவுள் எந்தக் குழந்தையை நமக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அதனை நாம் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு, பெற்றப் பிள்ளையைப் பேணி பாதுகாக்க வேண்டும். இதுதான் நல்லக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெற்றோரின் கடமை.

ஆனால் இரண்டாவது பிரசவத்திலும் பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியடைந்த ஒரு கொடூரத் தந்தை, அந்தப் பச்சிளங் குழந்தையைத் துப்பாக்கியால் சுட்டு பஞ்சமாப் பாதகத்தைச் செய்துள்ளார். இந்தக் கொலை நடந்தது இந்தியாவில் அல்ல, பாகிஸ்தானில்.  இரண்டாவதும் தமக்குப் பெண் குழந்தையே பிறந்ததால், ஆத்திரமடைந்தத் தந்தை, துப்பாக்கியால் தன் குழந்தையை 5 முறை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷாஜீப். இவருக்கு ஏற்கனவே ஒரு ல் பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, சமீபத்தில் அவருடைய மனைவிக்கு 2-வது பிரசவம் நடைபெற்றது. இதில் அவர் அழகானப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்தக் குழந்தையின் தந்தை ஷாஜீப், ஆண் குழந்தைக்கு பதில் 2வதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார்.

ஒரு வாரம் காத்திருந்த அந்தக் தந்தை, துப்பாக்கியால் 5 முறை சுட்டு அந்தப் பச்சிளங்குழந்தையைக் கொன்றுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பெண் குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க...

ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!

பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!

English Summary: Girl baby - father shot dead!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.