ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த பைக்குகளில் ஒன்று யமஹா RX 100. இன்றளவும் இந்த பைக்கிற்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த சூழலில், யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற RX 100 (Yamaha RX100) பைக்கை மீண்டும் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யமஹா RX 100 (Yamaha RX100)
இளைஞர்களின் பிரியமான இருசக்கர வாகனமாக RX 100 இருக்கின்றது. இந்த பைக்கை விரும்புவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகியுள்ளது. யமஹா நிறுவத்தின் இந்தியாவிற்கான சேர்மேன் இப்பைக்கின் இந்திய வருகையை உறுதிப்படுத்தி இருப்பதாக பிசினஸ் லைன் ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் பிசினஸ் லைன் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், யமஹா நிறுவனத்தின் இந்தியாவிற்கான சேர்மேன், ஐஷின் சிஹானா, இதுவரை யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற RX 100 பிராண்டை பயன்படுத்தி ஓர் வாகனத்தை கூட உருவாக்கவில்லை. அதை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர தாங்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
அதேநேரத்தில், அதை முன்பை போன்று 2 ஸ்ட்ரோக் வாகனமாக அல்லாமல், பிஎஸ் 6 தரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகையால், பழைய 2 ஸ்ட்ரோக்கில் கிடைப்பதைப் போன்று சூப்பர் ஃபாஸ்ட் வேகம், காதை கிழிக்கும் சத்தம் புதிய RX 100 இருக்காது என்பது தெரிகின்றது.
அதேவேலையில், இளைஞர்கள் இந்த அம்சங்களுக்காகவே RX 100 பைக்கை விரும்புகின்றனர். அதில் வெளியேறும் அதீத இரைச்சல் போதாதென்று அதனை மேலும் கூட்டும் வகையில் சில மாடிஃபிகேஷன்களையும் அவர்கள் செய்கின்றனர். இதுமட்டுமின்றி, பெட்ரோலுக்கு கலப்படம் ஆயில் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியும் யமஹா ஆர்எக்ஸ் 100 பயன்பாட்டாளர்கள் அப்பைக்கை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
புதிய RX 100 (New RX 100)
புதிய ஆர்எக்ஸ் 100 புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை 2026ம் ஆண்டிற்குள் அரங்கேற்றப்பட இருப்பதும் யமஹா நிறுவனத்தின் சேர்மேனின் பேட்டியின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
மேலும் படிக்க
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நவீன கருவி: கோவை இரயில் நிலையத்தில் அறிமுகம்!
இரயில் டிக்கெட் புக்கிங்: புதிய வசதியை அறிமுகம் செய்தது IRCTC!
Share your comments