மக்கள் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான தானியங்கள்,காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் ரசாயன உரங்களின் பயன்பாடு, பூச்சி கொல்லி மருந்துகளின் அளவு என அனைத்தும் அதிகமாக இருப்பதால் அதன் நச்சுத்தன்மை அவற்றை வாங்கும் நமக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் அரசாங்கம் விவசாயிகளை முடிந்தவரை இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு முறையில் ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்ய இயலும். மேலும் அவை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும் என்பதால், இம்முறையே அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.
நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு, 1,000 ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதற்காக, சுமார் 520 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள விவசாயிகளும், இயற்கை சான்றிதழ் பெற்று, தங்களது நிலங்களை பதிவு செய்துள்ளனர், என நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Share your comments