1. Blogs

கோடை உழவை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு

KJ Staff
KJ Staff
Pulses Seeds Avaialble at Subsidy Rate

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில், கோடை பயிர் சாகுபடிகளை பெருக்கும் நோக்கில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கோடைகால பயிர் விதைகள் வழங்கப்படுகின்றன.

கோடை உழவு

தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் பயன்பெறும் மானாவாரி நிலங்களில் இருபோக பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது. இடைப்பட்ட காலமான கோடைக் காலத்தில் விவசாய நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும். இதனை தடுக்க கோடை உழவு செய்யப்படுகிறது.

பெரும்பாலும் சாகுபடி செய்யப்பட்ட மானாவாரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக மாறிவிடும். கோடைகால உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறையும். மண்ணை புழுதிபட உழுவதால் மண்ணின் தன்மையானது மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால், மண்ணில் காற்றோட்டமும் அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதனால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும்.  இதனால் நிலத்தில் உள்ள செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாக மாறும், மேலும் விவசாய நிலங்களில் உள்ள களைக்கொல்லி மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளின் வீரியம் குறைந்து மண்ணின் விசத்தன்மை குறைகிறது.

மானிய விவரங்கள் 

  • எர்ணாபுரம், அ.தாழையூர், வைகுந்தம், கன்னந்தேரி, கண்டர்குலமாணிக்கம், நடுவனேரி, தப்பக்குட்டை, இடங்கணசாலை பிட் – 1, பிட் – 2 ஆகிய கிராம விவசாயிகளுக்கு, கோடை உழவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
  • பயறுவகை பயிர்களான, பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு, கொள்ளு ஆகிய விதைகளுக்கு, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
  • நிலக்கடலை தரணி, வி.ஆர்.ஐ., 8 ரக விதைகள், கிலோவுக்கு, ரூ.40 மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
  • உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம்(Azospirillum) பாஸ்போ பாக்டீரியா (Phospho bacteria)ரைசோபியம் (Rhizobium)
  • உயிரியல் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ் (Pseudomonas), ட்ரைக்கோ டெர்மா விரிடி (Trichoderma viride) ஆகியவையும், 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
  • அரசின் மானிய விதைகளை, விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விவசாய குழுக்களில் சேர அழைப்பு

தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தில், விவசாய குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் சேலம் பகுதி கிராம விவசாயிகளும், உறுப்பினராக இனைந்து கொள்ள வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம், அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து  ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், பருவம் சார்ந்த தொழில்நுட்பம் குறித்து விவாதித்து, உரிய ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Daisy Rose Mary
Krishi Jagran

English Summary: Good News For Salem Farmers: Get Summer Crop Seeds And Other Agriculture Inputs With 50% Subsidy Published on: 24 May 2020, 09:53 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.