இது AI யுத்தக்களம். உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு Ai தொழில்நுட்பத்தில் கால் பதிக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுளின் BARD AI தொழில்நுட்பத்தில் இணைத்துள்ளனர். இது chat Gpt-க்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
கூகுள் தனது AI சாட்போட் BARD-னினை, ChatGPT க்கு போட்டியாக மார்ச் மாதம் வெளியிட்டது. ஆரம்பத்தில் chatGPT அளவிற்கு பெரிதும் பயனர்களை ஈர்க்காத நிலையில் புதிய அம்சங்களை இணைத்துள்ளது. இது பயனர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. கூகுள் தனது தனித்துவமான AI சாட்போட் BARD-ஐ 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கச் செய்துள்ளது.
BARD கிட்ட Internet access:
chatGPT பொறுத்தவரை நீங்கள் கேட்கும் கேள்விக்கு தகுந்த பதில் மட்டுமே கிடைக்கும்(இலவசமாக பயன்படுத்தும் போது). ஆனால் BARD உங்களுக்கு Internet access வழங்கும், நீங்கள் தேடும் பதிலுக்கான source இணையதளத்தை காணவும் முடியும். இந்த வசதியை நீங்கள் CHATGPT-ல பணம் கொடுத்து வாங்கினால் மட்டுமே காண இயலும்.
BARD Mobile ல கூட பக்காவா work ஆகும்:
chatGPT யில் இருக்கும் மிகப்பெரிய பலவீனமாக கருதப்படுவது பல பயனர்களுக்கு இன்றளவும் மொபைலில் பயன்படுத்துவதில் சிரமமும், சிக்கல்களும் உள்ளது. இந்த இடத்தில் தான் ஸ்கோர் செய்கிறது கூகுளின் BARD AI
Image support:
chatGPT யில் பெரும்பாலும் வார்த்தைகள் அடங்கிய பதில்களே கிடைக்கும். ஆனால் கூகுளின் BARD AI-யில் உங்களுக்கு இமேஜ் அடங்கிய பதில்களும் கிடைக்கும். உதாரணத்திற்கு தலைச்சிறந்த 10 சுற்றுலாத்தலங்களின் பட்டியல் கேட்டால் புகைப்படத்துடன் உங்களுக்கு பதிலே வழங்கும்.
Images upload:
இது ஒரு அட்டகாசமான அம்சம். கிட்டத்தட்ட கூகுள் லென்ஸ் செய்யும் வேலை தான் என்றாலும் chat GPT ல இந்த வசதி இல்லை என்பதால், இங்கேயும் தன் கொடியை பறக்க விடுது BARD. இந்த வசதி மூலம் நீங்கள் ஒரு இமேஜை அப்லோடு அல்லது ஸ்கேன் செய்தும் உங்களது கேள்வியே BARD கிட்ட கேட்க முடியும்
Voice option:
Image ஆப்ஷன் போன்று தான் வாய்ஸ் ஆப்ஷனும் Chat Gpt-யின் சாதாரண பயனர்களுக்கு கிடைப்பது இல்லை. கூகுளின் BARD-ல் குரல்வழி மூலமும் உங்கள் கேள்விகளை தொடுக்க இயலும்.
Content Export Format:
chatGPT தரும் பதிலை உங்களால் copy செய்ய மட்டுமே இயலும். BARD-ல் chat GPT போன்று copy,like, dislike option உடன் கூடுதலாக உங்களது நண்பர்களுக்கு அதனை Docs ஆவோ இல்லனா Mail-ல Draft ஆவோ export பண்ணிக்கலாம். இந்த வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
கஷ்டப்பட்டு மெயில் அனுப்ப வேண்டாம்:
BARD-AI தொழில்நுட்பத்தை நீங்க GMAIL-ல கூட integrate பண்ணிக்க முடியும் என சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்த வசதி விரைவில் வரப்போகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சூப்பர் மெயில்ல ஈஸியா உங்களால் அனுப்பமுடியும்.
BARD 20+ Programming languages:
chatGPT பிரபலமாக முக்கிய காரணம், சில கோடிங்க் எல்லாம் அல்டிமெட்டாக பண்ணியது தான். IT ஊழியர்களுக்கு சவக்குழியை தோண்டிடும் எதிர்க்காலத்தில் என பரவிய செய்தி தான் அனைவரையும் ChatGPT பக்கம் இழுத்தது. இப்ப அதை ஓவர்டேக் பண்ணும் விதமாக C++, Python, Java, TypeScript, JavaScript போன்ற 20 வகையான மென்நிரல் மொழிகளுக்கு BARD சப்போர்ட் பண்ணுமாம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் AI-யின் வளர்ச்சியும், தேவையும் தடுக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் நம்மளை அப்டேட் செய்துக்கொள்வது இந்த போட்டி உலகில் நமக்கான வேலையின் உறுதித்தன்மையை நீடிக்க செய்ய இயலும் என்பது தான் பெரும்பாலனோரின் கருத்தாக திகழ்கிறது.
image courtesy: google pic ad
மேலும் காண்க:
வாத்தியார் வேலையை உதறித்தள்ளி விவசாயம்- ஆண்டுக்கு 30 லட்சம் வருமானம்!
Share your comments