தமிழகத்தில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் உள்பட பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு மதுப்பிரியர்களை அதிர்ச்சி அ டையச் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் என்ற பெயரில் மதுக்கடைகளை அரசே நடத்தி வருகிறது. இதனால், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்டோர், மதுவுக்கு அடிமையாவதால், அவர்களது குடும்பங்கள் பெரும் பாதிப்புக்க ஆளாகி வருகின்றன. எனவே மதுக்கடைகளை அகற்றுமாறு தாய்குலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சென்னையில்
அப்போது, அவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சென்னையில் பணி தொடங்கியுள்ளது.
குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் உள்பட மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவு.
மீண்டும் மடிக்கணினி
மாணவா்களுக்கு கையடக்க கணினி கொடுப்பதாகத் திமுக தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், மாணவா்கள் அதனை பயன்படுத்துவதில் சேதாரம் ஆகும் என்பதால், மீண்டும் மடிக்கணினியாகவே வழங்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் மடிக்கணினி வழங்காமல் விட்டுச் சென்றுள்ளனா். அவற்றையும் சோ்த்து கொடுக்கும் நடவடிக்கையில் உள்ளோம்.
30,000 மாணவர்கள்
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!
Share your comments