தமிழக அரசின் சார்பில் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை (Scholarship) வழங்கும் திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா (Karthiga) இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கல்வித்தகுதி அடிப்படையில் உதவித்தொகை
தமிழக அரசின் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு (Unemployed) உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி மாதமொன்றுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், பிளஸ்-2 படித்தவர்களுக்கு ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளில் (Differently Abled) 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்து உள்ளவர்களுக்கு ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி
அரசின் உதவித்தொகை திட்டத்தில் 31.12.2020 உடன் முடிவடையும் காலாண்டிற்கு உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை https://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
வயது:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 31.12.2020 -இன் படி 45 வயதும், மற்ற பிரிவினருக்கு 40 வயதும் கடந்து இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக படித்து கொண்டிருக்கக் கூடாது. அஞ்சல் வழியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகையைபெற முடியாது.
இந்த உதவித்தொகையை முதல் முறையாக பெற விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற சான்றிதழ்களுடன் வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (employment) மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் அளிக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று 3 ஆண்டு காலம் நிறைவு பெறாமல் 2020-2021-ம் நிதியாண்டுக்கு உறுதிமொழி ஆவணம் (Pledge document) அளிக்காதவர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வேலை இழப்பை சமாளிக்க வந்துள்ளது ஒரு காப்பீடு!
வெறும் 160 ரூபாய் முதலீட்டில் 23 லட்சம் சம்பாதிக்கலாம்!
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தற்போதைய பேலன்ஸை பார்ப்பது எப்படி?
Share your comments