மத்திய அரசு செயல்படுத்தி வரும் மலிவு விலை வீடுகள் திட்டத்தின் (Affordable housing program) கீழ் நீங்கள் வீடு கட்ட விண்ணப்பித்திருந்தால் உங்களது பெயர் பயனாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்று தெரிந்துகொள்ள இங்கே செக் செய்து பாருங்கள்.
வீட்டு வசதித் திட்டம்!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) என்ற வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. மலிவு விலையில் வீடுகளைக் கட்டித் தருவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்குள் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் (Basic facilities) நிறைந்த 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி முடிக்க இத்திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் (Interest Subsidy) இத்திட்டம் வழங்குகிறது. கொரோனா வைரஸ் (Corona Virus) பாதிப்பைத் தொடர்ந்து மக்களுக்கு உதவும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு 2021 மார்ச் 31 வரை நீட்டித்தது.
முதலீடு செய்து இலாபம் பெற, 100 ரூபாயில் SBI-இல் வங்கிக் கணக்கு!
விண்ணப்பிக்கும் முறை?
- நீங்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்குத் தகுதி பெற்றிருந்தால் http://pmaymis.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- மெயின் மெனுவின் கீழ் உள்ள 'Citizen Assessment' என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பதாரர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பின்னர் வரும் திரையில் உங்களது ஆதார் (Aadhar) விவரங்களைப் பதிவிட வேண்டும்.
- உங்களது தனிப்பட்ட விவரங்கள், வருமானம், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தற்போதைய குடியிருப்பு முகவரியுடன் ஆன்லைன் PMAY விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
- கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு விவரங்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்கவும்.
- உங்களது விண்ணப்ப நிலவரத்தை Track your Assessment Status என்ற வசதியில் சென்று நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு! ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி உள்ளே!
செக் செய்வது எப்படி?
- நீங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் (Rural) விண்ணப்பித்திருந்தால் rhreporting.nic.in?netiay/benificiary.aspx என்ற முகவரியில் செல்லவும்.
- புதிய பக்கம் ஓப்பன் ஆகும். அதில் உங்களது பதிவு எண்ணைக் கொடுத்து கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களைப் பற்றிய விவரங்கள் ஓப்பன் ஆகும். ஒருவேளை உங்களிடம் பதிவு எண் இல்லையென்றால் ’Advance search' என்பதை கிளிக் செய்து அந்தப் படிவத்தை நிரப்பவும்.
- ’search' என்ற வசதியை கிளிக் செய்தால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பட்டியல் ஓப்பன் ஆகும்.
- உங்களது பெயர் இணைக்கப்பட்டிருந்தால் பட்டியலில் உங்களது பெயர் மற்றும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு! ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி உள்ளே!
முதலீடு செய்து இலாபம் பெற, 100 ரூபாயில் SBI-இல் வங்கிக் கணக்கு!
Share your comments