மத்திய அரசு, 300 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஆதரிக்கும் வகையிலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த 300 ஸ்டார்ட் அப் (Start up) நிறுவனங்களுக்கு தேவையான நிதி வசதி, வழிகாட்டுதல், சந்தை அணுகல் ஆகியவற்றை வழங்கி, அவற்றிலிருந்து 100, ‘யுனிகார்ன்’ நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் நிறுவனங்கள் என அழைக்கப்படும்.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: ஒரு யோசனையை ஒரு தயாரிப்பாக அல்லது ஒரு எண்ணத்தை ஒரு நிறுவனமாக மாற்றத் தேவையான திறன்களை சேகரிக்காதது, பெரும்பாலான ஸ்டார்ட்- அப் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
நிதி உதவி
இதற்கு உதவுவதற்காகவே இந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 40 லட்சம் ரூபாய் வரையிலான நிதி உதவியும், வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கங்களை ஊக்குவித்து, ஊரகத் தொழில் முனைவோரை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். நிதி, வழிகாட்டுதல் மற்றும் திறன் சூழலியல் ஆகிய ஊரகப் புது நிறுவனங்களின் மூன்று முக்கியத் தேவைகளை ஸ்டார்ட்-அப் கிராமத் தொழில்முனைவோர் திட்டம் நிறைவேற்றுகிறது.
ஏழ்மையில் இருந்து கிராமப்புற மக்களை மீட்கும் லட்சியத்தோடு, அவர்கள் சொந்தத் தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த இந்தத் திட்டம் உதவி செய்கிறது. நிதி உதவி, தொழில் மேலாண்மைப் பயிற்சி மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றை இத்திட்டம் வழங்குகிறது.
மேலும் படிக்க
அனைவருக்கும் பென்சன்: சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் சலுகைகள்!
Share your comments