ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜூன் 30 உடன் முடிவடைந்த நிலையில், ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பான் கார்டுகளை மீண்டும் செயல்படுத்த, 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னதாக ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்படாததால் சுமார் 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சந்திர சேகர் கவுர் என்கிற நபர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes -CBDT) இந்தத் தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜூன் 30 என அறிவிக்கப்பட்டது, உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இந்தியாவில் உள்ள பான் கார்டு வைத்துள்ள 70.24 கோடி பேரில் 57.25 கோடி பேர் ஆதாருடன் தங்கள் கார்டுகளை இணைத்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 13 கோடி பேரில் 11.5 கோடி கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1, 2017-க்குப் பிறகு பான் கார்டு வழங்கப்பட்டவர்களுக்கு, ஆதாருடன் தானாக இணைக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேதிக்கு முன்னர் பான் கார்டு வழங்கப்பட்டவர்கள், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139AA இன் துணைப் பிரிவு (2) இன் கீழ், ஆன்லைன் மூலமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
"இந்த பான் மற்றும் ஆதாரை இணைக்கும் பணியினை அறிவிக்கப்பட்ட இறுதி தேதியில் அல்லது அதற்கு முன் செய்யப்பட வேண்டும், தவறினால் பான் செயல்படாது" என்று CBDT- RTI பதிலில் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.
இதை விமர்சித்த கவுர், ஜிஎஸ்டியை தவிர்த்து புதிய பான் கார்டின் விலை ரூ.91 மட்டுமே என்று கூறினார். “அப்படியானால், பான் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் எப்படி 10 மடங்கு அபராதம் விதிக்க முடியும்? மேலும், பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எப்படி வருமான வரி தாக்கல் செய்வார்கள்? பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க வேண்டும்” என்று கவுர் தி இந்துவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 234H, ஆதாருடன் பான் எண்ணை இணைக்காத நபரும் அபராத கட்டணம் செலுத்த வேண்டும். பான் கார்டை மீண்டும் செயல்படுத்த, CBDT ரூ.1,000 அபராதம் விதித்துள்ளது.
இதையும் காண்க:
இடம் நகராத காற்றழுத்த தாழ்வு- 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
TANTEA தொழிலாளர்களுக்கு டபுள் ஹேப்பி நியூஸ்- முதல்வர் அறிவிப்பு
Share your comments