1. Blogs

ரூ.2 கோடி வெல்ல அருமையான வாய்ப்பு- Don`t miss it!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Great chance to win 2 crore rupees
Business Standard

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் நிலவும் ஏற்ற இறக்கம், இந்திய ரூபாயின் மதிப்பு என பல்வேறு காரணங்களால், கடந்த சில நாட்களாக பெட்ரொல் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்த வண்ணம் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், 2 கோடி ரூபாய் பரிசு வெல்ல புதியத் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் (IOC)அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டரில் அறிவிப்பு (Notice on Twitter)

இந்தியன் ஆயில் நிறுவனம், இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, உங்கள் வாகனத்துக்கு 25 லிட்டர் டீசல் போட வேண்டும். இந்த 25 லிட்டர் டீசலும் ஒரே பில்லில் (Bill) இருக்க வேண்டும். இதன்பின் ஒரு SMS அனுப்பினால் 2 கோடி ரூபாய் வெல்வதற்கான வாய்ப்பு உங்களுக்குதான்.

ரூ.2 கோடி பரிசு (Rs. 2 crore prize)

ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு 15 நாட்களுக்கும், ஒவ்வொரு மாதமும் பரிசு வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு Diesel Bharo Inaam Jeeto’ என பெயரிடப்பட்டுள்ளது.

செய்ய வேண்டியது என்ன? (What to do?)

உங்கள் வாகனத்துக்கு 25 லிட்டர் டீசல் போட்டுவிட்டு, மொபைலில் இருந்து DEALER CODE (SPACE) BILL NUMBER (SPACE) QUANTITY ஆகியவற்றை டைப் செய்து 7799033333 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.

காலக்கெடு (Last Date)

இத்திட்டம் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகிறது.

தகுதி (Qualification)

18 வயதை கடந்த இந்தியக் குடிமக்கள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
ஒரு நாளைக்கு 2 SMS மட்டுமே அனுப்ப முடியும். வெற்றிபெறுவோருக்கு 2 கோடி ரூபாய் வரை பரிசு கிடைக்கும்.

மேலும் படிக்க...

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- நாளை முதல் அமல்!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

English Summary: Great chance to win 2 crore rupees-Don`t miss it! Published on: 19 April 2021, 10:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.