அலங்காரச் செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியானால் இந்தச் செய்தி உங்களுக்குத்தான். அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.
அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (Kokkidama). இந்த ஐடியா முதன்முதலில் அறிமுகமானது ஜப்பானில்தான்.
இது போன்சாய் (Bonsai) போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு மண் மற்றும் peat moss இவை இரண்டும் இருந்தாலே போதும். அதனால் இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.
கொக்கிடமா (Kokkidama)
கொக்கிடமா என்பது தாவரத்தின் வேர் பாகத்தை மண் பந்தினுள் நிறுத்தி அதற்கு மேல் மென்மையான பசுமையான பாசியை வைத்து அழகுபடுத்துவதுதான்.பின்னர் இந்த அமைப்பை குறிப்பிட்ட இடத்தில் அழகுக்கு வைப்பதற்கு ஏற்ப நூலினை வைத்து வடிவமைக்க வேண்டும்.
உகந்த தாவரங்கள் (Optimal plants)
நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும். கொக்கிடமா செய்வதற்கு பொருத்தமான சில தாவரங்களின் பெயர்கள்
1. சென்சிவேரியா
2. ஜாமியோகல்காஸ் ஜாமிஃபோலியா (Zamioculcas zamiifolia – Zz)
3. மணி பிளான்ட் (money plant)
4. அந்தூரியம் (anturium)
5. பிலோடென்ரான் (philodendron)
6. டிராசியேனா (Dracaena)
நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும்.இவை மட்டுமில்லாமல் வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரங்களும், சதைப்பற்று அதிகம் உள்ள அலங்காரத் தாவரங்களையும், சிறிய வேர்த்தொகுப்பு உள்ள தாவரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
செய்முறை (Preparation)
-
முதலில் மண் மற்றும் peat moss இரண்டையும் சேர்த்து, நாம் எடுக்கும் தாவரத்தினை பொறுத்து சிறிய பந்து போன்ற அமைப்பினை உருவாக்க வேண்டும்.
-
பின்னர் நாம் தேர்ந்தெடுத்த தாவரத்தின் வேர்பகுதியை அந்த பந்தின் நடுப்பகுதியில் வைத்து நூலினால் கட்டவேண்டும்.
-
டுதல் அழகு சேர்க்க பசுமையான பாசியினை அதன் மேல் வைக்கலாம்.
-
அதைப் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்பவும் வடிவமைத்துக்கொள்ளலாம்.
-
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சதைப்பற்று அதிகம் உள்ள தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் அதிகமாகவும் peat moss குறைவாகவும் இருக்க வேண்டும்.
-
அதேநேரத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் குறைவாகவும் peat moss அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
-
ரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது.
-
நாம் செய்யக்கூடிய பூச்சட்டிக் கலவை நன்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வியாபார வாய்ப்பு (Business Opportunity)
1. இன்று திருமண நிகழ்ச்சிகளில் தாம்பூல பரிசாக சற்று வித்தியாசமாக அழகு தாவரங்களையும் பரிசளிக்கலாம்.
இது நம் உறவினர்களுக்கு நினைவு சின்னமாகவும் மனநிம்மதி தரும் வகையிலும் அமையும்.
2. கார்பொரேட் கம்பெனிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஒப்பந்த அடிப்படியில் இதை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து இலாபம் பார்க்கலாம்.
3. இதன் நுணுக்கங்களை நாம் நன்றாக கற்றுக் கொண்டால் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தும் இலாபம் பார்க்கலாம்.
4. நாம் சொந்தமாக வலைத்தளம் தொடங்கி அதன் மூலமும் விற்பனை செய்யலாம்.
மேலும் படிக்க...
பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!
காப்பீட்டு விதியில் திருத்தம்! காப்பீடு தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!
Share your comments