காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாவட்டத்தில் நெல், வேர்க்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடுகின்றனர். இருப்பினும் அங்குள்ள விவசாயிகள் வாழை தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உத்திரமேரூரில் வட்டாரத்தில் உள்ள அம்மையப்பநல்லுாரில் மட்டும் 25 ஏக்கருக்கு அதிகமாக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வாழை விவசாயிகள் கூறுகையில், குறுகியகால பயிராக வாழை கன்று நடவு செய்த, 7வது மாதத்தில் இருந்து பலன் தர தொடங்கும். வாழையை பொறுத்தவரை அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருவதாலும், எல்லா மாதத்திலும் இதன் தேவை இருப்பதாலும் நல்ல விலை கிடைப்பதாக தெரிவித்தனர். ஊடுபயிராக மிக குறுகிய கால பயிர்களை பயிரிடும் போது எளிதில் நோய் தாக்குதலை தவிர்க்கலாம். உபரி வருமானமும் பெறலாம்.
வாழை இலைகளை 7வது மாதத்தில் இருந்தும், வாழை குலைகளை 10வது மாதத்தில் இருந்தும் அறுவடை செய்யலாம். தலை வாழை இலை ஒன்று, ரூ.4க்கும், வாழைக்காய், ரூ.4க்கும், பூ, ரூ.10க்கும், தேங்காய் நார், ரூ.20க்கும் விலை போகிறது. மழை அதிகமாக பெய்தால் கூட அவற்றை சமாளித்து விடலாம் என்கிறார்கள் மகிழ்ச்சியாக.
Share your comments