விவசாயி ஒருவர் அரசு பஸ்சில்,கோழிக்கும் அரை டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே அரை டிக்கெட் என்ற நிலையில், தற்போது கோழிகளுக்கும் அரை டிக்கெட்டா என்று அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கோழிக்கு அரை டிக்கெட் (Ticket for Chicken)
தெலங்கானா மாநிலத்தில், ஹைதராபாத்தில் உள்ள கொப்பாலை சேர்ந்தவர் ராமப்பா, 45. விவசாயியான இவர், கடந்த நவம்பர் 28ல் ஹைதராபாத்தில் இருந்து கொப்பால் கங்காவதிக்கு அரசு பஸ்சில் கோழியுடன் பயணித்தார். அப்போது டிரைவர், 'கோழிக்கும் அரை டிக்கெட் (Half Ticket) வாங்க வேண்டும்' என, கூறியுள்ளார். அதன்படி, 463 ரூபாய் கொடுத்து கோழிக்கும் தனியாக டிக்கெட் பெற்று பயணித்தார்.
ஒரு கோழியின் விலையை 300 ரூபாய் முதல் 400 ரூபாய் மட்டுமே இருக்கும். ஆனால் 463 ரூபாய் கொடுத்து பயணித்துள்ள இந்த கோழி, சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமான ஒன்று (Regularly)
இது குறித்து கண்டக்டர் அனிஷ் கூறுகையில், “ஹைதராபாத்தில் இருந்து கொப்பாலுக்கு வந்த ஒருவர், கோழியுடன் பஸ்சில் ஏறினார். கோழிக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என கூறியதால் அவர் வாங்கி பயணித்தார். இது வழக்கமாக உள்ளது தான்,” என்றார்.
மேலும் படிக்க
பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுமா?
திருமணப் பரிசாக பெட்ரோல்: இந்தியன் ஆயிலின் அசத்தலான அறிவிப்பு
Share your comments