வறுமையில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வெகுமதி கொடுத்து கவுரவிக்கலாம். அந்த வகையில், 2 லட்சம் ரூபாயை நேர்மையாக ஒப்படைத்தப் பெண்ணுக்கு, காவல்துறை ஆணையர் 1 கிராம் தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
ரூ.100 சம்பளம்
திருச்சி, தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருபவர் ராஜேஸ்வரி, 57. இவர் நேற்று வேலைக்கு சென்ற போது, ஹோட்டலுக்கு அருகில் காகிதப்பையில் அதிகமான பணம் இருந்துள்ளது.
காசுக்கு ஆசைப்படாத பெண்
அதை எடுத்து பார்த்த ராஜேஸ்வரி, ஹோட்டல் உரிமையாளர் பிரபாகர் உதவியுடன் தில்லை நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். தினமும் 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் ராஜேஸ்வரி, காகித பையில் இருந்த 2 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்படாமல், நேர்மையுடன் அதை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருப்பதைத் தெரிந்துகொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தார்.ராஜேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், 1 கிராம் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தார்.
நேர்மையாக இருக்கவேண்டும் என்பது சிறுவயது முதலே நமக்கு போதிக்கப்பட்ட ஒன்று. நாம் படித்தக் கல்வி நமக்கு போதித்தது அதுதான்.
ஆனால், வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் அதனைக் கடைப்பிடிப்பவர்கள் சொற்பமே. அந்த வகையில், மற்றவர்களுக்கு உதாரணமாக மாறியுள்ள இந்த பெண்ணின் நேர்மைக்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் படிக்க...
Share your comments