இன்றைய சூழ்நிலையில் பணிப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கைக்கு வருமானம் மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டை இன்றைய இளைஞர்களும் அதற்கு ஏற்ப தங்களின் கல்வி அறிவை வளர்த்து வருகின்றனர். முன்பெல்லாம் டார்டர், என்ஜீனியர் போன்ற படிப்புகளே அதிக வருமானம் தரும் தொழிலாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பைலட், மேலாண்மை ஆலோசகர் , பட்டய கணக்காளர் போன்ற பல தொழில்முறை வாய்ப்புகள் நல்ல வருமானத்தை அளிக்கின்றன.
அந்த வகையில், 2021ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணக்கூடிய நல்ல வருமானம் கிடைக்கூடிய சில தொழிற்துறைகள் குறித்து இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
சிவில் சர்வீசஸ் - Civil Services (UPSC)
சிவில் சர்வீசஸ் தேர்வு இந்தியாவின் அதி உயர் பதவிக்கானதும், மற்றும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு ஆளும் வர்க்கத்தை உருவாக்க பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நடைமுறை நாட்டின் மிக மதிப்புமிக்க வேலைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் நிதி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மதிப்பிற்குரிய தொழில் விருப்பமாக அமைகிறது. இதே போன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்ஃ.எஸ்., இந்திய வெளியுறவுத்துறை சேவை அதிகாரி (IFS ) உள்ளிட்ட பதவிகளும் நிரகார மதிப்பை வழங்குகிறது. இந்த பதவிகளில் இருப்பவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு மாதத்திற்கு ரூ.80,000-ரூ.90,000 வரை சம்பளம் பெறலாம். கூடுதலாக அரசின் சலுகைகளும் கிடைக்கும்.
மேலாண்மை நிபுணர் அல்லது ஆலோசகர்கள் - Management Professional or Consultants (MBA/PGDM)
மேலாண்மை தொழில் என்பது நிதி, சந்தைப்படுத்தல், செயல்பாடுகள், மனித வளம், தரவு பகுப்பாய்வு (data analytics ) மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொழில்வாய்ப்பு தரும் படிப்பாக இருக்கிறது. இந்த பதவியை அடைய எம்பிஏ (MBA) அல்லது பிஜிடிஎம் (PGDM) முதுகலை பட்டயப் படிப்புகள் தேவைப்படுகிறது.
மேலாண்மை வல்லுநர்கள் ஆண்டுக்கு சுமார் 10-12 லட்சம் ரூபாய் வரை அதிக சம்பளம் பெறலாம், ஆனால் கல்லூரி நிலையைப் பொறுத்து ரூ.20 லட்சம் வரையும் சம்பளம் பெற வாய்ப்புகள் உள்ளன. ஆரம்பத்தில் ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்றாலும் உங்களின் அனுபவங்கள் மூலம் நல்ல சம்பளம் வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைபடத் தேவையில்ல! எல்.ஐ.சி-யிடம் ஒப்படைத்துவிட்டால் போதும்!
கணினி அறிவியல் பொறியியல் (பி.டெக்) - Computer science engineering
இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே வரும் ஆண்டுகளில் கணினி சார்ந்த தொழில்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இதற்கு அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது. கணினி சார்ந்த பல புதிய தொழில்கள் பிரபலமடைவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, வலைத்தளங்களுக்கான ஸ்லாட் மெஷின் கேம்ஸ்களை (slot machine games)உருவாக்கும் வீடியோ கேம் புரோகிராமர் ஆண்டுக்கு ரூ .51,80,000 அல்லது அதற்கும் அதிகமாக சம்பாதிக்கலாம்.
ஆம், நிச்சயமாக, கணினி துறை சார்ந்த பொறியியல் படிப்புகள் என்பது இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தொழில்களில் முதன்மையானதாக உள்ளது. நீங்கள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அல்லது மைக்ரோசாப்ட், கூகிள் , அமேசான் போன்றவற்றில் வேலைபார்த்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.
வழக்கறிஞர் - Lawyer (BA LLB/ B.Com LLB/ BBA LLB)
வழக்கறிஞர்களுக்கான தேவை எப்போதும் இருக்கிறது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் மற்றும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெருநிறுவன, குற்றவியல், சிவில் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்த தொழில்கள் அனைத்திற்கும் சம்பளம் மாறுப்படும். இதற்காக, நீங்கள் BA LLB/ B.Com LLB/ BBA LLB பட்டம் பெற்றிருக்க வேண்டும், இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆய்வு தேவைப்படுகிறது. கார்ப்பரேட் வழக்கறிஞர்கள் சுமார் வருடத்திற்கு ரூ.7 முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
வர்த்தகம் சார்ந்து கடல்துறை - Merchant Navy
நீங்கள் கடலை நேசிக்கிறீர்கள் மற்றும் கடல் வழியாக பயணம் செய்ய ஆர்வமாக இருந்தால், நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கையை எதிர்பார்க்கலாம். ஒரு வணிக கடற்படை அடிப்படையில் வணிகக் கப்பல் நடவடிக்கைகளை நிர்வகிக்கும் ஒரு குழுவைக் குறிக்கிறது. இந்த வேலையை ஒரு டிரக் டிரைவருடன் ஒப்பிடலாம். இந்த பணியில், குடும்பத்திலிருந்து விலகி 6-9 மாதங்கள் நீரில் செலவழிக்க வேண்டியிருக்கும். வணிக கடற்படை நிலையில் ரூ.6 முதல் ரூ.7 ஆண்டுகள் கழித்து, நீங்கள் மாதத்திற்கு ரூ .1.5-ரூ.2.0 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.
ஒரே முதலீட்டில் மாதந்தோறும் ரூ.4000/- பென்சன் பெற்றிடுங்கள்!
Share your comments