ஆன்லைனிலேயே NSDL இணையதளத்தில் பான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். இதுபோக, பான் கார்டு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதுமட்டுமல்லாமல், ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் கார்டான e-PAN கார்டை சில நிமிடங்களிலேயே வாங்கிவிடலாம்.
பான் - ஆதார் இணைப்பு (Pan - Aadhar linking)
வருமான வரித் துறையின் e-Filing இணையதளத்தில் ஆதார் கார்டையும், பான் கார்டையும் எளிதாக இணைத்துவிடலாம்.
பான் கார்டு வாங்க கட்டணம் எவ்வளவு
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க 93 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். வெளிநாட்டுக்கு பான் கார்டு அனுப்பப்பட வேண்டுமெனில் 864 ரூபாய் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
பான் கார்டு செல்லுபடியாகும் காலம்
ஒரு முறை பான் கார்டு வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். எனினும், வீட்டு முகவரி மாற்றம் போன்ற தகவல்களை அப்டேட் செய்துவிட வேண்டும்.
பான் கார்டில் திருத்தம் (Pam card correction)
பான் கார்டு விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் NSDL, UTIITSL இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பென்சன் தொகை உயர வாய்ப்பு!
பென்சன் தொகை உயர்வு: யாருக்கெல்லாம் கிடைக்கும் - முழுவிவரம் இதோ!
Share your comments