இயற்கை பேரிடரின்போது வீட்டிலுள்ள பொருட்களுக்குச் சேதம் ஏற்பட்டால், ரூ .3,00,000 வரை காப்பீடு பெறும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
பேரிடர் (Disaster)
கொட்டித்தீர்க்கும் கனமழை, புரட்டி எடுக்கும் புயல், சுழற்றி அடிக்கும் சூறாவளி உள்ளிட்ட இயற்கை போரிடர்கள் எதிர்பாராத நேரத்தில் நம்மைத் தாக்குகின்றன.
சேத ஆபத்து (Risk of damage)
இதனால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுதல், வீட்டில் இடி தாக்குதல், சுற்றுச்சுவர் இடிந்து விழுவது உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
புதியத் திட்டம் (New project)
அவ்வாறு, இயற்கை பேரிடர்களால் வீடுகளுக்கு ஏற்படும் சேதத்தைக் கருத்தில் கொண்டு வீடுகளுக்குக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance plans)
மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களான, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு விபத்து மற்றும் இறப்பு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, உங்கள் வீட்டிற்கானக் காப்பீட்டுத் திட்டத்தை தொடங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
ரூ.3 லட்சம் காப்பீடு (Rs.3 lakh insurance)
இந்தப் புதியத் திட்டத்தின்படி, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மக்கள் வீடுகளுக்கு ஏற்படும் சேதங்களை ஈடுசெய்ய மத்திய அரசு ரூ .3,00,000 காப்பீட்டுத் தொகையை வீடுக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கும்.
பொருட்சேதத்திற்கும் காப்பீடு (Insurance for property damage)
வீடு மட்டுமல்லாது, இயற்கை பேரிடர்களின்போது வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் இந்த காப்பீட்டு திட்டத்தில் ரூ .3,00,000 வரை காப்பீட்டு தொகை பெறலாம்.
தலா ரூ .3 லட்சம் (Rs 3. lakh each)
-
மேலும், தனிப்பட்ட விபத்து பாதுகாப்பு கொள்கையைப் பெறும் குடும்பத்தின் இரண்டு உறுப்பினர்களுக்கு தலா ரூ .3 லட்சம் வழங்கப்படும்.
-
மத்திய அரசின் இந்த திட்டம் பொது காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட உள்ள நிலையில், அதன் பிரீமியம் மக்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும்.
பிரீமியம் எவ்வளவு? (How much is the premium?)
தகவல்களின்படி, பொது காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிக்கான பிரீமயம் ரூ.1,000 க்கு மேல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாலிசியின் பிரீமியத்தை ரூ .500 க்கு அருகில் வைத்திருக்க அரசாங்கம் விரும்புகிறது.
பலத்த மழை மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை மத்திய அரசு பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!
வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்
கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!
Share your comments