வீடு வாங்க வேண்டும் பலரது கனவாக இன்றும் உள்ளது. இதற்காக, பல்வேறு வங்கிகள் பலவித சலுகைகளை வீட்டுக் கடனுக்கு வழங்கி வருகிறது. அவ்வப்போது சலுகைகளை அறிவித்து வரும் SBI வங்கி, தற்போது மீண்டும் ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுதந்திர தினத்தையொட்டி வீட்டுக் கடன்களுக்கு (Home Loan) எஸ்பிஐ வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. வீட்டுக் கடன் வாங்குவோருக்கு 3 விதமான ஜாக்பாட் சலுகையை இங்கு பார்ப்போம்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் (National Independence day) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வீட்டுக் கடன் வாங்கும் நபர்களுக்கு பிராசஸிங் கட்டணம் (Processing Fees) முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
Good News: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாத வருமானம்!
வட்டிச் கலுகை
பிராசஸிங் கட்டணமே ஒரு ஜாக்பாட் என்றால், பெண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 0.05% வட்டிச் சலுகை வழங்குகிறது எஸ்பிஐ வங்கி. இதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் (YONO) மூலம் வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்தால் இன்னொரு 0.05% வ்ட்டிச் சலுகை கிடைக்கும். எனவே, மொத்தம் மூன்று ஜாக்பாட் தான்.
மிஸ்டு கால்
எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன்களுக்கு 6.70% முதல் வட்டி வழங்குகிறது. மிஸ்டு கால் மூலமாகவும் கடன் பெற விண்ணப்பிக்கலாம். எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள 7208933140 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ட்விட்டரில், “இந்த சுதந்திர தினத்தில் உங்கள் சொந்த வீட்டில் காலடி எடுத்து வையுங்கள். எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சொந்த வீடு வாங்குவதன் மூலம் வாடகையில் இருந்து சுதந்திரம் பெறுங்கள்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
வீட்டுக் கடனுக்கான வட்டி குறைவு: 15 வங்கிகள் அறிவிப்பு!
ஆகஸ்ட் 15-இல் அட்டகாசமாக அறிமுகம் ஆகிறது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Share your comments