விவசாயத்தில் பெரும் புரட்சி ஏற்படுத்த தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கையை போற்றும் விதமாக, கிரிஷி ஜாக்ரன், அவருக்கு மரியாதை செலுத்தும் விழாவை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில், சுவாமிநாதன் சாரின் மகள் டாக்டர். சௌம்யா சுவாமிநாதனுடன் முக்கிய விவசாய நிபுணர்கள் பங்கேற்று, இந்திய விவசாயம் சிறந்து விளங்குவதற்காக, அவர் ஆற்றிய அற்புதமான அனுபவங்களையும், அவரது அற்புதமான பங்களிப்பையும் பகிர்ந்து கொண்டனர்.
14 விருந்தினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர், இதில் இருவர் காணோளி வாயிலாக இணைந்தார், அதில் ஒரு ஐயா, சுவாமிநாதனின் மகள் சௌமியா சுவாமிநாதன் ஆவார்.
விருந்தினர்கள் பேசும்போது, டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதனின் இந்திய விவசாயத்திற்கான அவரது சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தினர்.
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் மேற்கோள் காட்டினர்:
"உலகின் நான்கில் மூன்று பங்கு ஏழைகள் விவசாயிகள் மற்றும் நமது விவசாயிகளில் 82% பேர் தங்கள் பயிர்களுக்கு மழையை நம்பியிருப்பதால், ஒரு சொட்டு தண்ணீருக்கு அதிக பயிர்களை வளர்ப்பதே இன்றைய மிக முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சினை" ஆகும்.
"நாம் அனைவரும் ஒரே உலகின் ஒரு பகுதி என்பதை நாம் உணர வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், காலநிலைப் பிரச்சினைக்கு, நாம் சரியான தீர்வு காணவில்லை என்றால், வேறு எந்தப் பிரச்சினைக்கும் நாம் சரியான தீர்வு காண முடியாது." என அவர் எப்போதும் வலியுறுத்துவார்.
"விவசாயம் என்பது பிரபலமான நம்பிக்கையின்படி பயிர் உற்பத்தி அல்ல - இது உலகின் நிலம் மற்றும் நீரிலிருந்து உணவு மற்றும் நார் உற்பத்தி ஆகும். விவசாயம் இல்லாமல், ஒரு நகரம், பங்குச் சந்தை, வங்கி, பல்கலைக்கழகம், தேவாலயம் அல்லது இராணுவம் இருக்க முடியாது. விவசாயம் நாகரிகம் மற்றும் நிலையான பொருளாதாரத்தின் அடித்தளம்." ஆகும்.
"பயிர் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தக்கூடிய மகரந்தச் சேர்க்கை, பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குவதை பல்லுயிர் ஊக்குவிக்க முடியும்."
"இன்று விவசாயத்தில் வெற்றி பெற, பண்ணை உற்பத்தித்திறன் மற்றும் மீள்தன்மை அதிகரிக்க புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு தேவைப்படுகிறது."
"விவசாயம் ஒரு இலாபகரமான மற்றும் கவர்ச்சிகரமான தொழிலாக மாற்றப்பட வேண்டும், இதனால் இளைஞர்கள் அதை வாழ்வாதாரத்தின் ஆதாரமாகக் காணலாம், அது பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட முறையில் திருப்திகரமாகவும் இருக்கிறது."
இறுதி விருந்தினராக, பேசிய ஐயாவின், மூத்த மகள் டாக்டர். சௌம்யா சுவாமிநாதன், தனது தந்தை ஆற்றிய பணிக் குறித்து பேசும்போது, அவர் தனது வாழ்வு முழுவதும் உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் செலவிட்டார். ஆனால் சத்தான உணவு உற்பத்திக்கு, இன்னும் நாம் நெடுதூரம் பயணிக்க வேண்டி உள்ளது, என்பதனை மறக்கமுடியாது எனக் குறிப்பிட்டார்.
இவை, அவரது தொலைநோக்கு பார்வை, ஆனால் இயல்பு வாழ்க்கையிலும், சிறியவர் பெரியவர் என வித்தியாசப்படுத்தாமல் நட்புக்கொள்வதாகட்டும், அனைவரிடமும் அன்பு பாராட்டிய விதமாகட்டும், அவரது நேர்மை தவறாமை என அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் அனைவரும் பாராட்டினர்.
இந்நிகழ்வின் இறுதி கட்டமாக, கிருஷி ஜாக்ரன் பெருமையுடன் தனது ஆங்கில பதிப்பான அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் இதழும், தமிழ், மற்றும் மலையாள அக்டோபர் பதிப்பினையும் வெளியிட்டது, அதன் அட்டைப்படத்தில் புகழ்பெற்ற டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Share your comments