விவசாயிகள் பலரும் இன்று சொட்டு நீர் பாசனம், நுண்ணீர் பாசனம், தெளிப்பு பாசனம் என பாசன முறையை மாற்றி அமைத்து வருகின்றனர். எனினும் விவசாயிகள் சீரான இடைவெளியில் சாகுபடிக்கு உபயோகிக்கும் நீரையும், பாசன குழாய்களையும் பரிசோதித்து பாசனத்தை மேற்கொள்ளும் படி வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடி மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சி வருகின்றனர். தொடர்ந்து பயன்படுத்தும் போது சொட்டு நீர் குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு, நீர் பாய்ச்சுவதில் தடைகள் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்படும். இதனை தவிர்க்க விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றி வேளாண் துறையினர் விளக்கியுள்ளனர்.
- ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பாக கோடை காலங்களில் பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரை பரிசோதனை செய்ய வேண்டும். முக்கியமாக கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை பயன்படுத்துபவர்கள் இதனை மேற்கொள்ள வேண்டும்.
- பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் பி.எச்., எனப்படும் கார, அமில நிலையை உறுதி செய்ய வேண்டும். நீர்ணயித்த நன்நீர் அளவு பி.எச்., 7 ஆகும். இவை அதிகரிக்கும் போது உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
- விவசாயிகள் பாசன குழாய்களில் ஏற்படும் கார்பனேட் படிவங்களை தடுக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பாஸ்பரிக் அமிலம் கொண்டு சரி செய்ய இயலும். பரிந்துரைத்த அளவுகளில் தண்ணீருடன் கலந்து நீர் குழாய்களில் செலுத்தினால் அடைப்புகளை தடுக்கலாம்.
Share your comments