1. Blogs

உங்கள் PF அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How much money is in your PF account?

தொழிலாளர்கள் அனைவருக்குமே, தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு இருப்பு தொகை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இதைத் தெரிந்துகொள்வது, தற்போது தொழில் நுட்ப வசதிகளால் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்புநிதி

சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவருக்கும் PF கணக்கு வழங்கப்பட்டிருக்கும். இந்த PF கணக்கில் ஊழியரின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை தொடர்ந்து செலுத்தப்பட்டு வரும். அதேபோல, அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பிலும் அதே தொகை தொடர்ந்து செலுத்தப்படும்.

வட்டி

இதுபோக, உங்கள் PF கணக்கில் உள்ள நிதிக்கு வட்டித் தொகையையும் EPFO செலுத்தும். தற்போது PF கணக்குகளுக்கு 8.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், PF கணக்கில் உள்ள பணத்தை பயனாளிகள் எடுத்துக்கொள்ளவும் முடியும். இதற்கு தனி விதிமுறைகள் உள்ளன.

ஆன்லைனில் அறியலாம்

எனினும், உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எப்படி தெரிந்துகொள்வது? மிக எளிதாக ஆன்லைனிலேயே சில நிமிடங்களில் உங்கள் PF பேலன்ஸ் தொகையை பார்த்துவிடலாம்.

தெரிந்து கொள்வது எப்படி?

  • https://www.epfindia.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும்.

  • அதில் Our Services பிரிவுக்கு செல்லவும்.

  • அதில் For Employees பகுதியை தேர்வு செய்யவும்.

  • அதில் Member Passbook பகுதியை கிளிக் செய்யவும்.

  • உங்களின் UAN நம்பர் மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி உள்ளே நுழையவும்.

  • உங்களின் பாஸ்புக்கில் உங்களின் சொந்த பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு, வட்டித் தொகை, மொத்த இருப்பு தொகை ஆகிய அனைத்து விவரங்களும் இருக்கும்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

English Summary: How much money is in your PF account? Published on: 17 November 2022, 07:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.