பெண் குழந்தைகளுக்கான மோடி அரசின் மிகச் சிறந்த திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriti Yojana) அல்லது செல்வ மகள் சேமிப்புத் திட்டம், இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் (Post Office) கணக்கு துவங்கலாம். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
கணக்கு தொடங்குவது எப்படி?
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க அவர்களின் பிறப்புச் சான்றிதழைச் (Birth Certificate) சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக வழங்கலாம். செல்வமகள் திட்டத்தின் படிவத்தை (Form) நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
வட்டி (ம) பயன்கள்
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி (Interest) வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
லாபம் எவ்வளவு?
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் ரூ.1,000 சேமித்து வந்தால் இத்திட்டத்தின் முடிவில் மொத்தம் ரூ.1.80 லட்சம் டெபாசிட் (Deposit) செய்யப்பட்டிருக்கும். அதற்கு வட்டியாக ரூ.3.29 லட்சம் கிடைக்கும். மொத்தமாகப் பார்த்தால் ரூ.5.09 லட்சம் உங்களது பெண்ணுக்குக் கிடைக்கும். ஒருவேளை ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 சேமித்து வந்தால் மொத்தம் உங்களுக்கு ரூ.63.65 லட்சம் கிடைக்கும். இதில் டெபாசிட் பணம் ரூ.22.50 லட்சம் மற்றும் வட்டிப் பணம் (Interest) ரூ.41.15 லட்சம்.
பேலன்ஸ் பார்ப்பது எப்படி?
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் தொகையின் பேலன்ஸ் விவரத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆன்லைன் (Online) மூலமாகப் பார்ப்பது, மற்றொன்று பாஸ்புக் (Passbook). சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு தொடங்கி சேமித்து வந்தால் அந்த வங்கியின் நெட் பேங்கிங் (Net Banking) மூலம் நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும். ஒருவேளை தபால் நிலையத்தில் நீங்கள் கணக்கு தொடங்கியிருந்தால் தபால் நிலையத்துக்குச் சென்று பாஸ்புக்கில் டெபாசிட் விவரங்களைப் பதிவிட்டு வாங்கி அதன் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!
Share your comments