கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிவப்பு கொய்யா சாகுபடி செய்வதில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்கள். இடுபொருள் செலவு, நீர் தேவை, பராமரிப்புபணி, கூலி ஆட்கள் தேவை என அனைத்தும் குறைவாகவே இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் சிவப்பு கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
மலைக்கோட்டாலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கொய்யா சாகுபடிக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதில்லை. ஒருமுறை பயிரிட்டால், அடுத்த 15 ஆண்டுகள் வரை காய்ப்பதால் கணிசமான லாபம் கிடைக்கிறது. வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானதாது. குறிப்பாக உரம் தெளிக்கும் பணி இல்லை. காய்கள் பாதிப்படையாமல் இருக்க இயற்கை முறையில் மாதத்திற்கு ஒருமுறை வேப்ப எண்ணெய் கரைசல் தெளிப்பதாக தெரிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு எரு தெளித்தால் போதுமானது. 4 மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 3 டன் வரை கிடைக்கும், என தெரிவித்தார்கள்.
பல்வேறு நோய்களுக்கு இப்பழம் தீர்வாக இருப்பதால் பொதுமக்களும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக சர்க்கரைநோய், கேன்சர், அல்சர், மலட்டு தன்மை போன்றவற்றை போக்குகிறது. மேலும் மதிப்பூட்டப்பட்ட பொருள்களான ஜூஸ், சாஸ் உள்ளிட்ட தயாரிக்க பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர, உள்ளூர் சந்தைகளிலும் கொண்டு சென்று விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.
Share your comments