காய் வகைகளில் அனைத்துத் தரப்பினரும் விரும்பி உண்ணும் மற்றும் அனைத்து நோயாளிகளும் உண்ணக்கூடிய காய், பீர்க்கங்காய் ஆகும். உள்ளூர் சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் இக்காய் தற்போது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாவதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் விவசாயிகள் விரும்பி பயிர் செய்கின்றனர்.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் பல்வேறு காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்யப் பட்டு வருகின்றன. அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை பயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால் வேளாண்மை அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் குறுகிய கால பயிர்களை விரும்பி பயிர் செய்கின்றனர். கொடி வகைகளான பாகல், புடலை, அவரை, பீர்க்கை ஆகியன குறைந்த நாட்களில் மகசூல் தருகிறது.
நடவு செய்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பலன் தர துவங்கும். நான்கு நாட்கள் இடைவெளியில் காய்கள் பறிக்கலாம். இவ்வாறாக தொடர்ந்து 80 நாட்கள் வரை மகசூல் கொடுக்கும். ஒரு ஏக்கருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும். மகசூலாக 8 டன் வரை கிடைக்கும். இதில் ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும். சந்தையில் கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.40 வரை கிடைப்பதால், ஏக்கருக்கு ரூ.2.5 லட்சதிற்கு மேல் வருவாய் கிடைப்பதாக தெரிவித்தனர். நடவு செய்த 40 நாட்களில், ஏக்கருக்கு குறைந்தது ரூ.1.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Share your comments