வங்கி மோசடியாளர்கள் பல நுட்பங்களைப் பயன்படுத்துவது அம்பலமாகி வருகிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் சற்று கவனத்துடன் இல்லாவிட்டால் முழு பணத்தையும் இழக்க நேரிடும் என பாரத ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகளின் செயல்முறைகளிலும் இணைய வங்கி வசதி மூலம் நாம் பல வித நன்மைகளைப் பெறுகிறோம். எனினும், வசதிகள் இருக்கும் அதே நேரம் பல வித இன்னல்களும் இதன் மூலம் ஏற்படுகின்றன. அந்த வகையில், பெரும்பாலும் மக்கள் வங்கி மோசடிக்கு இரையாவது கண்கூடாகத் தெரிகிறது. அதிலும் அண்மைகாலமாக மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு புதிய வழிகளை கண்டுபிடித்து பயன்படுத்துகிறார்கள்.
வலையில் விழ
மோசடி நபர்கள், மக்களை அச்சுறுத்தியோ, அல்லது பணத்தாசை காட்டியோ அவர்களை தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வங்கி மோசடி குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
ஆன்லைன் வங்கி மோசடியைப் பொருத்தவரை, மோசடி நபர்கள், மக்களை அச்சுறுத்தியோ, அல்லது பணத்தாசை காட்டியோ தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். பின்னர், இந்த மோசடிக்காரர்கள் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். இப்படிப்பட்ட இன்னல்களிலிருந்து தனது வாடிக்கையாளர்களை காக்க, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வங்கி மோசடி குறித்து வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
தவறான எண்கள்
எஸ்பிஐ தனது ட்விட்டர் கணக்கில் தவறான, போலி எண்களைப் புரிந்துகொள்ளும்படி ட்வீட் செய்துள்ளது. இப்படிப்பட்ட எண்களுக்கு எப்போதும் திரும்ப அழைக்க வேண்டாம் (கால் பேக்) என்றும் எஸ்எம்எஸ்-க்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்-கள் உங்கள் தனிப்பட்ட/நிதித் தகவல்களைத் திருடுவதற்கான ஒரு மோசடி வழியாக இருக்கக்கூடும் என வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனுடன் எஸ்பிஐ ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளது.
கவனம் அவசியம்
இந்த வீடியோவில் எஸ்.பி.ஐ., மூலம் போலி எஸ்.எம்.எஸ் மூலம் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு போலி செய்தி வந்தாலும், சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.தவறான எண்ணிலிருந்து செய்தி அனுப்பப்பட்டிருந்தால், அது அதிகாரப்பூர்வ ஐடியிலிருந்து அல்லாமல் தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப்பட்டதா என்பதைச் சரிபார்க்கவும்.
புறக்கணிக்கக் கூடாது
இது தவிர, இதுபோன்ற எஸ்எம்எஸ் அனுப்பிய பிறகு, யாராவது போன் செய்து, அனுப்பப்பட்ட செய்திக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சொன்னால் அதை கண்டுகொள்ள வேண்டாம் என வங்கி கூறியுள்ளது. SMS அனுப்பி விரைவாக பணம் செலுத்துமாறு யாராவது உங்களிடம் கேட்டால், மிகவும் கவனமாக இருக்கவும். மேலும், அனுப்பப்படும் குறுந்தகவல்களில் இலக்கணப் பிழைகள் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், இது தவறான, போலியான செய்தி என்பதையும், அந்த எண் போலியான எண் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க...
PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!
Share your comments